
பள்ளி மாணவர்கள் கம்மல், செயின், காப்பு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது கம்மல், செயின், காப்பு, கயிறு போன்றவை அணியக்கூடாது. தலையில் எண்ணெய் வைத்து தலை வாரவேண்டும். மாணவ மாணவியருக்கு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. இதுபோன்ற நிபந்தனைகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சமூக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
Continue reading …
4 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோட்டை சேர்ந்த சிறுமியை அவரது தாயாரும், தாயாரின் காதலனும் சேர்ந்து கட்டாயப்படுத்தி கருமுட்டைகளை மருத்துவமனைகளுக்கு விற்ற விவகாரம்.சிறுமியை தாயாரின் காதலன் வன்கொடுமை செய்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாயார், தாயாரின் காதலன், கருமுட்டை விற்ற ஏஜெண்ட் பெண் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக சிறப்பு குழு அமைத்து […]
Continue reading …
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டோம். தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை என்று நோய் தொற்று பரவி வருகிறது. இந்நோய் உலகம் முழுதும் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை […]
Continue reading …
விராட் கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சார்பாக விளையாடவில்லை. அவர் விளையாடதது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கின்றனர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்த அணியில் இஷான் கிஷான், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, […]
Continue reading …
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவின் எந்த அணிக்கும் சப்போர்ட் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுக உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. பொதுக்குழு கூட்டத்தன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே […]
Continue reading …
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையை தொடங்குவதாகவும் 148 நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இப்பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் […]
Continue reading …
“காபி வித் காதல்” திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சுந்தர் சி பேய் படங்களாகவே இயக்கி வந்தார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்போது சுந்தர் சி மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ளார். ஆமாம், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி ஆகியோரும் […]
Continue reading …
வரும் 26ம் தேதி இன்டர்நெட் தொழில்நுட்பமான 5ஜி ஏலமிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலத்தில் 4 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் அதானி நிறுவனமும் விண்ணப்பம் செய்துள்ளன. 4.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 5ஜி அலைவரிசையை இந்த நான்கு நிறுவனங்களில் எந்த நிறுவனம் பெறும் என்பதை ஜூலை 26ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க […]
Continue reading …
பசில் ராஜபக்சே துபாய்க்கு தப்பி செல்ல முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் அரசின் செயலற்ற தன்மையால் மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் ராஜபக்சே, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் வெளி நாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் […]
Continue reading …
கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்று சில வாரங்களாக அதிகரித்து வரும், தினம் தோறும் கொரொனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், தனக்கு கொரொனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும், கொரொனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சமூக வலைதளத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #சிளிக்ஷிமிஞி19 உறுதி செய்யப்பட்டதையடுத்து […]
Continue reading …