
இன்று மாலை “சூர்யா 41” திரைப்படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சூர்யா 41” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகவிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சூர்யா 41 படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கும் இந்த டைட்டில் “வணங்கான்” அல்லது […]
Continue reading …
சென்னை பீனிக்ஸ் மாலில் “கோப்ரா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விக்ரம் நடித்த வெளிவந்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகி உள்ளது. மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டானர். கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டின் உரிமையை ரெட் […]
Continue reading …
சமீபத்தில் திரையரங்குகளில் நடிகர் அருண் விஜய் நடித்து வெளியான திரைப்படம் “யானை.” இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கிய “யானை” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 1ம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய “யானை” திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
Continue reading …
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை கூட்டணி கட்சி தலைவராக ஏற்று கொண்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய ராமதாஸ், “பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், ராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Continue reading …
அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமைக்கான ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியாருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தன்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரமில்லை என்று கூறி அதிமுக அலுவலகம் முன் ஓபிஎஸ் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகமருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து எதிர்க்கட்சித் […]
Continue reading …
பானாவரத்தில் ரவுடி சரத்குமாா் (22) கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகொலை – தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட SP தீபா சத்யன் IPS, DSP பிரபு […]
Continue reading …
முதல்முறையாக ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை அலியா பட். அலியாபட் நடித்து சமீபத்தில் திரையங்குகளில் வெளியான “கங்குபாய் கதியவாடி” திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது ஹாலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி அதில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருமணமான அலியா பட் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Continue reading …
உலகின் மிகவும் பிரசித்திப்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் அச்சுறுத்தலால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பக்தர்கள் அமர்நாத் கோவிலுக்கு யாத்திரைக்கு சென்றனர். ஆனால் திடீரென மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழை காரணமாக சுமார் 40 பேரை காணவில்லை. […]
Continue reading …
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் […]
Continue reading …