Home » Entries posted by Shankar U (Page 502)
Entries posted by Shankar

மெகா தடுப்பூசி மையம்!

Comments Off on மெகா தடுப்பூசி மையம்!

ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாட்டில் நாளை மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2700க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபத்தில் […]

Continue reading …

குறை தீர்ப்பு முகாம்!

Comments Off on குறை தீர்ப்பு முகாம்!

இன்று முதல் ரேஷன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குறை நீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், பொதுமக்கள் சேவைகள் உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜூலை மாதத்திற்கான முகாம் நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகளில் பொருட்களை நேரில் வந்து வாங்க இயலாதார்கள், மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. இம்முகாமில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், […]

Continue reading …

அம்பானி – அதானியிடையே மோதல்!

Comments Off on அம்பானி – அதானியிடையே மோதல்!

அம்பானி மற்றும் அதானி இந்தியாவில் 5ஜி ஏலத்தை எடுக்க போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு சமீபத்தில் 5ஜி ஏலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் ஏலம் நடைபெற உள்ளது. 20 ஆண்டுகளுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது என்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு மதிப்பு 4.3 லட்சம் மதிப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உட்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி […]

Continue reading …

பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு!

Comments Off on பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கின்ற தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 11ம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பானவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் எவ்வித மாறுதலுமின்றி 11ம் தேதி நடைபெறும் என்று […]

Continue reading …

போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

Comments Off on போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

போக்குவரத்துத்துறை நடத்துனர் மற்றும் ஓட்டுனரும் கட்டாயம் மாஸ்க் அணிவது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டுமென போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் பெறப்பட்டும் வருகிறது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண்டிப்பாக […]

Continue reading …

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு!

Comments Off on தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல வட இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துவதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஐந்து ரூபாய் வரை […]

Continue reading …

இலங்கை மக்கள் போராட்டம்!

Comments Off on இலங்கை மக்கள் போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறைந்தபாடில்லை. இதனால் அங்கு வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பறிதவித்து வருகின்றனர். இதனால் இலங்கையில் சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி உள்ளதால், பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இலங்கைக்கு சீனா, இந்தியா உட்பட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது எரிபொருள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. அதிபர் கோத்தப ராஜபக்சே மற்றும் பிரதமர் […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன்’ டீசர் ரிலீஸ்!

Comments Off on ‘பொன்னியின் செல்வன்’ டீசர் ரிலீஸ்!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைக்கு வரவிருக்கும் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு மிகச்சரியாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை […]

Continue reading …

செங்கல்பட்டு விபத்தில் 5 பேர் பலி!

Comments Off on செங்கல்பட்டு விபத்தில் 5 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மேல் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு விரைவு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. […]

Continue reading …

குரங்கு அம்மை வீரியம்!

Comments Off on குரங்கு அம்மை வீரியம்!

குரங்கு அம்மை வீரியம் நாளுக்கு நாள் 58 நாடுகளில், 6,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். முதன்முதலாக ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்நோயின் அறிகுறி கண்டறியப்பட்டது. இருந்தாலும், தற்போது ஆப்பிரிக்கா தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். உலக சுகாதார […]

Continue reading …