Home » Entries posted by Shankar U (Page 52)
Entries posted by Shankar

செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

Comments Off on செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக அவர் ஆவேசமாக பேசி வருகிறார். ஒடிசாவில் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தமிழ்நாடு […]

Continue reading …

ஓசி பீடிக்காக கொலை!

Comments Off on ஓசி பீடிக்காக கொலை!

ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த 65 வயது கட்டிட வேலை செய்பவர் நடைமேடையில் உறங்கியுள்ளார். அவரிடம் அதே பகுதியில் வேலை பார்க்கும் ஒருவர் ஓசி பீடி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ஓசி பீடி கொடுக்கவில்லை என்பதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் தன்னிடம் சண்டை போட்ட கட்டிட வேலை […]

Continue reading …

சிவாஜி கணேசன் சிலையை மாற்ற எம்.எல்.ஏ.கோரிக்கை!

Comments Off on சிவாஜி கணேசன் சிலையை மாற்ற எம்.எல்.ஏ.கோரிக்கை!

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அந்த இடத்தில் இருந்து இந்த சிலையை அகற்றி அதனை வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்து. திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்ஏ மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]

Continue reading …

“குட் பேட் அக்லி” ஓ.டி.டி விற்பனை இத்தனை கோடியா?

Comments Off on “குட் பேட் அக்லி” ஓ.டி.டி விற்பனை இத்தனை கோடியா?

கடந்த சில மாதங்களாகவே திரைப்படங்களின் ஓ.டி.டி விற்பனையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவிற்கு பிறகு இந்திய சினிமாவில் ஓ.டி.டி உரிமம் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அந்த சமயத்தில் அதிக விலைக்கு ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தன. இது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதில் நிறைய கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால் “லால் சலாம்“ மாதிரியான பெரிய திரைப்படங்கள் கூட ஒ.டி.டியில் வெளியாவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. […]

Continue reading …

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து விழிப்புணர்வு!

Comments Off on ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து விழிப்புணர்வு!

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து மதுரை யானைமலை ஒத்தக்கடையில், வணிகர் நலச் சங்கம் பேரவையின் 41-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தய விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொதுச் செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். தலைவர் ரகுபதி, பொருளாளர் முனீஸ்வரன், துணைத் தலைவர் துரைராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில், 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. இந்த போட்டி, திருமோகூர் சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே தொடங்கி, […]

Continue reading …

மகளிர் குழுக்கள் மூலம் சீருடை பணி; தமிழக அரசு!

Comments Off on மகளிர் குழுக்கள் மூலம் சீருடை பணி; தமிழக அரசு!

பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின் அனைத்து பள்ளிகளுக்கும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள […]

Continue reading …

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி!

Comments Off on அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜக மீதோ, மோடி மீதோ மக்கள் மத்தியில் கோபம் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதே அளவு வெற்றி பெறும் அல்லது அதைவிட சிறப்பாக வெற்றி பெறும் என்று தான் கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் முடிவை தலைகீழாக புரட்டிப் போடும் வகையில் மக்களுக்கு மத்திய அரசு மீது எந்த கோபமும் இல்லை. ஒரு […]

Continue reading …

பெங்களூரில் நடந்த பார்ட்டி; கலந்து கொண்ட இளம்பெண்கள்!

Comments Off on பெங்களூரில் நடந்த பார்ட்டி; கலந்து கொண்ட இளம்பெண்கள்!

போதை மாத்திரைகள், கொகைன் ஆகியவை பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்த பார்ட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பார்ட்டியில் 30 இளம் பெண்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள பண்ணை இல்லத்தில் வாசு என்பவர் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் அதில் 30 பேர் இளம்பெண்கள் என்றும் கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பார்ட்டி விடிய விடிய நடந்ததாகவும் டான்ஸ், பாடல்கள் ஆட்டம் […]

Continue reading …

திமுக அரசு குறித்து அண்ணாமலை காட்டம்!

Comments Off on திமுக அரசு குறித்து அண்ணாமலை காட்டம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் […]

Continue reading …

ஈரான் அதிபர் மரணம்! கொண்டாடும் பெண்கள்?

Comments Off on ஈரான் அதிபர் மரணம்! கொண்டாடும் பெண்கள்?

நேற்று ஹெலிகாப்டரில் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹீம் ரைசி பயணம் செய்தார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் துணை அதிபர் முகமது முக்தர் இன்று அதிபராக பதவியேற்று கொண்டார். ஈரான் நாட்டின் அதிபர் மரணத்தை அந்நாட்டு பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் நாட்டு அதிபர் சர்வாதிகாரி போலவும் பழமைவாதியாகவும் நடந்து கொண்டார். அவரது மரணத்திற்கு […]

Continue reading …