Home » Entries posted by Shankar U (Page 536)
Entries posted by Shankar

இசைப்புயலின் புதிய அவதாரம்!

Comments Off on இசைப்புயலின் புதிய அவதாரம்!

கென்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ள “லெ மஸ்க்” திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இசைப்புயல் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. இதன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் சினிமாவிலிருந்து தனது இசை பயணத்தை தொடங்கியவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கி கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர்த்து சமீபத்தில் “99 சாங்ஸ்” போன்ற படங்களை தயாரித்தார். தற்போது முதன்முறையாக ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் இசை […]

Continue reading …

உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியான சம்பவம்!

Comments Off on உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியான சம்பவம்!

13 வயது சிறுவன் கைக்குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தை மாயமாகியுள்ளது. இந்த நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவருக்கு ஒரு வயதில் ரீத்து என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைதான் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பள்ளியின் நீர் தொட்டியில் […]

Continue reading …

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

Comments Off on சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த அரை மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது 3 […]

Continue reading …

மோகன் லாலுக்கு சம்மன்!

Comments Off on மோகன் லாலுக்கு சம்மன்!

அமலாக்கத்துறை சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளதால் கேரள மாநிலத்தில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோன்சன் மாவுங்கல் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். புராதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு சினிமா பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மோகன்லால், உட்பட பலரும் அவரிடம் பழங்காலப் பொருட்கள் வாங்கியுள்ளனர். மோன்சன் மாவுங்கலிடம் புராதன பொருள் வாங்கிய ஒருவர் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். […]

Continue reading …

பிரகாஷ் ராஜ் எம்.பி. ஆகிறாரா?

Comments Off on பிரகாஷ் ராஜ் எம்.பி. ஆகிறாரா?

நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக போவதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரகாஷ் ராஜை ராஜ்ய சபா எம்பியாக்க போவதாக கூறப்படுகிறது.

Continue reading …

நான்கு அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு!

Comments Off on நான்கு அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு!

நான்கு புதிய அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே முன்னிலையில் பதவிபிரமாணத்துடன் நடைபெற்றது. மக்கள் போராட்டம் காரணமாக மஹிந்த ராஜபக்சே மே 9ம் தேதி பதவி விலகியபின், ரணில் விக்ரமசிங்க மே 12ம் தேதி இலங்கை பிரதமராகப் பதவியேற்றார். அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் நான்கு பேர் இன்று இணைந்தனர். இந்த பதவி பிரமாண நிகழ்வு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (14) முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி மணிமண்டபத்தில் ஆய்வு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி மணிமண்டபத்தில் ஆய்வு!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரிடன் கோரிக்கையை ஏற்று, சிவாஜி மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Continue reading …

லாட்டரியால் தொடரும் வேதனை!

Comments Off on லாட்டரியால் தொடரும் வேதனை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதன் வேதனை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி கூறும் போது, “ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி வேதனையளிக்கிறது. இதுகுறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்! தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி […]

Continue reading …

மக்கள் குறைதீர் முகாம்!

Comments Off on மக்கள் குறைதீர் முகாம்!

மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை நீர் முகாம் சென்னையில் 18வது மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்வது மற்றும் மேலும் மற்ற குறைகளை சொல்வது போன்றவை நடைபெற்றன. இதில் மக்கள் கலந்து கொண்டு பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.

Continue reading …

அஜித்துடன் இணையும் ஆதி!

Comments Off on அஜித்துடன் இணையும் ஆதி!

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உட்பட ஒருசிலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இளம் தமிழ் ஹீரோக்களில் ஒருவரும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஆதி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அஜித் 61 படத்தில் ஆதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு […]

Continue reading …