Home » Entries posted by Shankar U (Page 548)
Entries posted by Shankar

கடுமையான அனல் காற்று வீசும்

Comments Off on கடுமையான அனல் காற்று வீசும்

கடுமையான அனல் காற்று வரும் ஐந்து நாட்களுக்கு வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி தமிழகத்தில் நேற்று எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக தெரிகிறது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரியும், கரூரில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தியது. மே மாதம் நான்காம் தேதி அக்னி […]

Continue reading …

குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது?

Comments Off on குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது?

5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக ஆரம்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Continue reading …

முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

Comments Off on முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Continue reading …

சமந்தா போஸ்டர் இணையத்தில் வைரல்!

Comments Off on சமந்தா போஸ்டர் இணையத்தில் வைரல்!

“சகுந்தலம்” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்தார். இவர் “புஷ்பா” படத்தில் கவர்ச்சியாக ஆடிய நடனம் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் தனது அடுத்தடுத் திரைப்படங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சமந்தா. அவருக்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்த நாளான இன்று அவர் […]

Continue reading …

ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம்!

Comments Off on ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம்!

மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தேரோட்டம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க ஆய்வு செய்து வருகின்றனர். மிகவும் பிரசித்திப் பெற்றது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயிலில் நாளை தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர் செல்லும் பாதைகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் […]

Continue reading …

ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

Comments Off on ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

தீ விபத்து ஏற்பட்ட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் தீப்பிடித்த நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்த 128 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து மீட்டனர். இதுகுறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. […]

Continue reading …

சிறுவர், சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி ஆரம்பம்!

Comments Off on சிறுவர், சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி ஆரம்பம்!

சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.   6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்காக தடுப்பூசி Corbevaxக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ZyCov-D இன் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் DCGI பரிந்துரைத்துள்ளது. ZyCov-D-ஞி கடந்த […]

Continue reading …

புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

Comments Off on புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் […]

Continue reading …

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது!

Comments Off on 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது!

2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0 என்ற வேட்டையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. இதில் போதை பொருளான கஞ்சா மொத்த வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர். ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி […]

Continue reading …

தக்காளி விலை கிடுகிடு ஏற்றம்!

Comments Off on தக்காளி விலை கிடுகிடு ஏற்றம்!

தக்காளி விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும். ஆனால் தற்போது 40 லாரிகளில் […]

Continue reading …