Home » Entries posted by Shankar U (Page 678)
Entries posted by Shankar

மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்!

Comments Off on மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்!
மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்!

சென்னை, மே 2 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள நிலையில், நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களை நோய்த் தாக்காமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை  என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் […]

Continue reading …

ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் – அன்புமணி!

Comments Off on ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் – அன்புமணி!
ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் – அன்புமணி!

 சென்னை, மே 1 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை  செயல்படுத்தும் பணியில் காவல்துறையினருடன் சேர்த்து ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள்  எத்தகைய பணிகளை செய்கிறார்களோ, அதே பணிகளை செய்யும்படி ஊர்க்காவல் படையினரும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த பணியின் […]

Continue reading …

தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !

Comments Off on தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !
தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !

சென்னை, ஏப்ரல் 30 கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ் நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு முதலமைச்சர் உத்தரவு. தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் […]

Continue reading …

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்!

Comments Off on பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்!

பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர், வயது 67 இன்று காலை காலமானார். இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் […]

Continue reading …

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்

Comments Off on வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்

 சென்னை, ஏப்ரல் 30 நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும்  புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு […]

Continue reading …

பாட்டாளிகள் நாள் – இராமதாஸ் வாழ்த்து!

Comments Off on பாட்டாளிகள் நாள் – இராமதாஸ் வாழ்த்து!
பாட்டாளிகள் நாள் – இராமதாஸ் வாழ்த்து!

உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து செய்தி. உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் […]

Continue reading …

மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!

Comments Off on மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!
மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!

ஏப்ரல் 29 மருத்துவர்களுக்கு 1000 PPE கிட்களை நன்கொடையாக அளித்த நடிகை வித்யாபாலன். அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் தற்போது மருத்துவர்களுக்கு PPE கிட்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்களின் பணி மிகவும் மகத்தானது. அவர்கள் நமது எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையானவர்கள். இந்த […]

Continue reading …

சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு: சோதனைகளை அதிகரிக்க வேண்டும்!

Comments Off on சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு: சோதனைகளை அதிகரிக்க வேண்டும்!
சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு: சோதனைகளை அதிகரிக்க வேண்டும்!

 சென்னை, ஏப்ரல் 29 சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், நேற்று ஒரு நாளில் மட்டும் 103 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. ஒட்டு மொத்த தமிழகத்திலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னையில் பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் நேற்று ஒரு நாளில் மட்டும் 121 பாதிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களையும் சேர்த்து […]

Continue reading …

சாய்பல்லவியை வர்ணித்த இயக்குனர்!

Comments Off on சாய்பல்லவியை வர்ணித்த இயக்குனர்!
சாய்பல்லவியை வர்ணித்த இயக்குனர்!

சென்னை,ஏப்ரல் 27எம் ரங்கநாதன் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘பூவரசம் பீப்பி’ என்ற திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் சமீபத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி கொண்டாடினர். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய்பல்லவி சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்து தனது […]

Continue reading …

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை : ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!

Comments Off on 20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை : ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!
20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை : ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!

சென்னை,  ஏப்ரல் 27 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதே நிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. […]

Continue reading …