திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.13.49 கோடியில் மீன்,இறைச்சி மார்க்கெட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் […]
Continue reading …கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு. கர்நாடகாவின், உத்தர கன்னடா, ஷிவமொகா, சிக்கமகளூரு மாவட்டங்களில், ‘கியாசனுார் வன நோய்’ என்றழைக்கப்படும், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் கர்நாடக பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த கியாசனுார் வனப்பகுதியில், 1957ல் இந்த காய்ச்சல் முதல்முறையாக கண்டறியப்பட்டது. மனித உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலான இந்த வைரஸ் காய்ச்சல், தெற்காசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களிலும் குரங்கு […]
Continue reading …சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 18 கோடி நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருச்சி தேசியக்கல்லூரியில் சர்வதேச விளையாட்டு (ஐசிஆர்எஸ்) கருத்தரங்கு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 11-ந் தேதி […]
Continue reading …அதிமுகவுக்கு பெருகும் முக்குலத்தோர் ஆதரவு. அதிமுக கூட்டணி யார்… யார்..? இருக்கிறார்கள் என்று இன்னும் முடிவாகாத நிலையில், சின்ன, சின்ன கட்சிகள் மட்டுமே தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை, அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு, மருது தேசிய கழகம் ஆகிய முக்குலத்தோர் அமைப்பினை சேர்ந்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு வந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தனி தனியாக சந்தித்து அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் சுபாஷ் […]
Continue reading …தெப்பக்குளம், NSB சாலை வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம். மேயர் அன்பழகன் தகவல். திருச்சி சிங்காரதோப்பில் அடிப்படை வசதிகள் நிறைந்த யானைக்குளம் மைதானத்திற்கு தெப்பக்குளம் மற்றும் NSB ரோட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை இடமாற்றம் செய்யும் மாநகராட்சியின் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள பரபரப்பான வணிகத் தெருக்களில் இருந்து விற்பனையாளர்களை மூன்று மாதங்களுக்குள் யானைக்குளம் மைதானத்திற்கு மாற்ற முடியும் என்றவர், ஒரு […]
Continue reading …தூத்துக்குடி மாவட்டம்கயத்தாறு பேரூராட்சி 15வது வார்டு பாரதிநகரில் பேரூராட்சி இயக்கம் மற்றும் பராமரித்தல் விதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணியினை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமிஇராஜதுரை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் சாராமொபைல்மைதீன், பாரதி நகர் வார்டு உறுப்பினர் திரு ஆதிலட்சுமி, பேரூராட்சி உறுப்பினர்கள் […]
Continue reading …திருச்சி, உறையூர் நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏரரளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் அங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 2 ஆவது தலமாகும். மேலும் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் திருவாய்மொழி திருநாள்விழா பிப்ரவரி 1 ஆம் தேதி […]
Continue reading …தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர். அ.இ.அ.தி.மு.க-விலிருந்து 14 பேரும்,இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து ஒருவரும், பா.ஜ.கவில் இணைய போவதாக தகவல். மேற்கண்டவர்களில் கரூர் கு.வடிவேல், அரவக்குறிச்சி கந்தசாமி, வலங்கைமான் கோமதி, சீனிவாசன், சிங்காநல்லூர் சின்னச்சாமி, கோயம்புத்தூர் சேலஞ்சத் துரை, பொள்ளாச்சி ரத்தினம், வேடசந்தூர் வாசன், கன்னியாகுமரி முத்துக்கிருஷ்ணன், புவனகிரி அருள், குறிஞ்சிப்பாடி ராஜேந்திரன், ஆண்டிமடம் தங்கராசு, கள்ள குறிச்சி […]
Continue reading …அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு. சேலத்தில் அதிமுக பொது செயலாளருடன் நிர்வாகிகள் சந்திப்பு. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு செய்து, இன்று சேலத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி மாநில தலைவர் பூமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள், […]
Continue reading …தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கட்சி தொடங்கியவுடனே அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார்கள். பல இடங்களில் உற்சாகத்தோடு கொண்டாடியும் வருகிறார்கள். இந்த நிலையில் தளபதி அவர்களின் உத்தரவின்படி அகில இந்திய மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex.MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி தேனி மாவட்ட இளைஞரணி தலைமையில் அம்பி வெங்கடசாமி நாயுடு மஹாலில் நாளை தமிழக வெற்றி கழகம் சார்பாக […]
Continue reading …