கடலூர், மே 15 விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது முந்தரி காட்டில் கடந்த 13.7.2019 ஆம் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக ஊமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஊமங்கலம் காவல் துறையினர், அடையாளம் தெரியாமல், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
Continue reading …திருச்சி, மே 13 திருச்சி மாவட்டம் அமயபுரம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் விஜயநாதன். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட குளத்துராம்பட்டி கிராமத்தில் கோவிட் 19 தடுப்பு மற்றும் பிளிச்சிங் பணிகளில் ஈடுப்பட்டு விட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு மேல் மறுநாள் கிருமி நாசினி பொருட்கள் தேவை என்பதால் வையம்பட்டி யூனியன் அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்து விட்டு அவரிடம் சில தகவல்களை சொல்லிவிட்டு, குடிமராமத்து பணிக்கான சம்பள தொகை மற்றும் கிருமி நாசினி பொருட்களை வாங்கி […]
Continue reading …சென்னை, மே 13 டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதி மீறல்களுக்கும் எல்லா விதமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை. கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு […]
Continue reading …மும்பை, மே 13 கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை நிமித்தமாக, தங்களது சொந்த ஊரை விட்டு வந்த பல தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தனர். மும்பையில் அப்படி வந்து தவித்த சுமார் 350 வெளிமாநிலத் தொழிலாளர்களை, வில்லன் நடிகர் சோனு சூட் 10 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அப்போது அவர் […]
Continue reading …சென்னை, மே 13 தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்சி, அதன்பின் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்தார். தற்போது நடிகை டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சனுடன் டாப்ஸி நடித்த ’பிங்க்’ திரைப்படம் தான் தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற படமாக ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை […]
Continue reading …சென்னை,மே 12 கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி […]
Continue reading …சென்னை,மே 6 நாம் தொடர்ச்சியாக டாக்டர் தணிகாசலம் ஒரு போலி டாக்டர் என்றும், கொரனா விற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார் என்று ஆதாரபூர்வமாக செய்திகளை வெளியிட்டுவந்தோம். அதேபோல் அவர் ஒரு டாக்டர் அல்ல, மனநோயாளி என்ப்தையும் தெரியப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இந்த நிலையில் தான் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் அவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்த […]
Continue reading …சென்னை,மே 4 நாம் தொடர்ந்து போலி சித்த வைத்தியர் தணிகாசலம் பற்றிய செய்தியினை ஆதார பூர்வமாக வெளியிட்டு வருகிறோம். கடந்த இரண்டாம் தேதி கூட நம் இணைய தளத்தில் வெளியிட்டோம். நம் செய்தி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், கோவிட் -19 எனும் கொரனோ வைரஸ் குறித்து வாட்ஸ் […]
Continue reading …சென்னை,மே 4 தமிழக முதல்வருக்கு த.மு.மு.க தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம் அனிபா விடுக்கும் வேண்டுகோள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் தமிழக அரசு கவனம் அதிகமாக செலுத்தி அவர்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள், அதை சரியான முறையில் டெல்லியில் இருக்கும் தமிழக பிரதிநிதிகளை வைத்து அவர்களை தமிழகம் கொண்டு […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 30 ‘உழைப்புதான் இந்த உலகை வாழ்விக்கிற சக்தி’ என்பதை நிரூபிக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு நினைவு கூர்வோம். உலகம் இதுவரை சந்தித்திராத சூழ்நிலையில் கூட எத்தனையோ பேரின் உழைப்புதான் மனித குலத்தைக் காப்பாற்றி […]
Continue reading …