உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை.
தற்போது இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. இதற்கு இந்திய அணியும் சம்பந்தம் தெரிவித்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் வீரர்கள் யாரும் பயிற்சி எடுக்கவில்லை. இதனால் போட்டிகளை பிசிசிஐ ரத்து செய்தது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுடன் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாட இருந்தது. இந்த தொடர் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிசிசிஐ அந்த போட்டியையும் ரத்து செய்துள்ளது. இரண்டு நாடுகளுடனான தொடர்களை அதிகபூர்வமாக பிசிசிஐ ரத்து செய்துள்ளது.