உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரமோத் யாதவ் 2012 சட்டமன்றத் தேர்தலில் ஜான்பூரின் மல்ஹானி தொகுதியில் பலம் வாய்ந்த தனஞ்சய் சிங்கின் மனைவி ஜாக்ரிதி சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டார். இத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் பரஸ்நாத் யாதவ் வெற்றி பெற்ற நிலையில், ஜக்ரிதி சிங் 2வது இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில் தான் பிரமோத் யாதவ் சுட்டு கொல்லப்பட, இதுவரை யார் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேரில் கண்ட சாட்சிகளை தேடி வருகின்றனர். தகவலின்படி, இந்த சம்பவம் ஜான்பூரின் பக்சா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போதாபூர் திருப்பத்தில் நடந்துள்ளது. அங்கு பாஜக தலைவர் பிரமோத் யாதவை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். படுகாயமடைந்த அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர்.