பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

Filed under: உலகம் |

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனாவால் 51 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்; கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பின்னர் 713 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.