இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையின் வரிசையில் தமிழகம் மூன்றாவது இடம்!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு வேலையில் ஈடுபடும் காவல்துறை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் தமிழ்நாட்டில் பாதிக்கப்டும் காவல்துறைக்கு மூன்றாவது இடம் .

தற்போது நாடு முழுவதும் இதுவரை 6,810 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.ர் அதில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 689 காவல்துறையினரும் மற்றும் தமிழகத்தில் 560 காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் 491 பேர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் துறையினர் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரசால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.