முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் […]
Continue reading …தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச் சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதரகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் […]
Continue reading …உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட […]
Continue reading …தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் உரிய நெறிமுறைகளுடன் திறக்கக்கோரி தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சங்கத்தினர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்த விபரமாவது. கொரானா குறைந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் வகைப்பாட்டில் மூன்றாம் நிலையில் நிலவுவதால் இங்கு வழிபாட்டு தலங்கள் திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரானா தொற்று குறைந்து […]
Continue reading …காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது. மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக […]
Continue reading …காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு […]
Continue reading …தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் […]
Continue reading …தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை காலையுடன் முடிவடையவிருக்கும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து 11&ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் […]
Continue reading …பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]
Continue reading …எலெக்ஷன் கார்னர் அமைச்சர்களிடம் நிதி வசூலித்த மதிமுக! தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மதிமுக தேர்தல் நிதி அளிப்பு கூட்டங்களின் வழியாக இதுவரையில் 21.5 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது. இன்னும் சென்னை மண்டலம் மட்டும் பாக்கி. ‘இது ரொம்பக் குறைவு’ என்று வருத்தம் தெரிவித்திருக்கிறாராம் வைகோ. ‘இதை வசூலிக்க நாங்க பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும்’ என்று புலம்புகிறார்கள் மதிமுகவினர். உதாரணமாக, மதுரை மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்கள் சேர்ந்து 1 கோடி ரூபாய் நிதி கொடுத்தது. அதில், உண்மையில் […]
Continue reading …