தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?- லீக் செய்த தேமுதிக நிர்வாகிகள்! அதிமுகவிடம் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அதிமுக தேமுதிகவுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. 40 தொகுதிகளில் இருந்து இறங்கிவந்துள்ள தேமுதிக 21 அல்லது 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக அதிமுகவிடம் கூறியுள்ளது. […]
Continue reading …காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் ‘பி’ டீம்: திமுகவை மறைமுகமாக விமர்சித்த கமல்! காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் ‘பி’ டீம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு […]
Continue reading …திமுக- மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி: எண்ணிக்கை வேறுபாட்டால் முடிவு எட்டப்படவில்லை! திமுக – மார்க்சிஸ்ட் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டணிக் கட்சிகள் இடையே நடந்து வருகிறது. இதில் இழுபறி நீடித்த நிலையில் நேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டது. தொடர்ந்து மதிமுக, […]
Continue reading …BREAKING ‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியன குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டுவதால் […]
Continue reading …ஒருபக்கம் தொகுதி பங்கீட்டியில் நேர்காணலை தொடங்கிய இழுபறி – மறுபக்கம் காங்கிரஸ்! சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் தரப்பில் 35 லிருந்து தற்போது 27 வரை கேட்கப்பட்டு வரும் நிலையில், திமுக தரப்பில் 22 தான் தர முடியும் என திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். இதனால் […]
Continue reading …மூன்றாவது அணிக்கு தாவுகிறதா மதிமுக…? வைகோ எடுத்த அதிரடி முடிவு திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, விசிக, சிபிஐ ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை திமுக நிறைவு செய்துள்ளது. இன்னும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடியவில்லை. இந்தக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மதிமுக 12 தொகுதிகளை எதிர்பார்க்க, திமுக 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்க இயலவில்லை […]
Continue reading …அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி! இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக் கட்சி தயாராக உள்ளது என கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி விவராகத்தில் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் அதிமுகவில் இதுவரை பாஜகவிற்கு 20 […]
Continue reading …தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தும்! 20 சீட் தான் பாஜகவை அசால்ட் பண்ணிய அதிமுக..! நடந்தது என்ன ? 41 தொகுதிகள் என ஆரம்பித்து 31 தொகுதிகளாக குறைத்து பிறகு 25 தொகுதிகளாக இறங்கி வந்தும் பாஜகவிற்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று அரசியல் சாணக்கியத்தனத்துடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை அள்ளி அள்ளி கொடுத்தது. இதனை […]
Continue reading …காங்கிரசை கழட்டிவிட முயற்சி செய்யும் திமுக; புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்திய போது, காங்கிரஸ் இல்லாமல் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. திமுக 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் 30க்கும் மேல் தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து […]
Continue reading …திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ”50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேன்மொழி வெற்றிபெறுவார்” என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிவருவதைப்பார்த்தால், மீண்டும் தேன்மொழிக்குத்தான் சீட்டு என்று கட்சியினர் பேசி வந்தார்கள். இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில் இருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், நிலக்கோட்டை தொகுதியில் தனக்கு சீட் […]
Continue reading …