Home » Archives by category » உலகம் (Page 18)

நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

Comments Off on நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேபாள நாட்டில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது. இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continue reading …

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

Comments Off on தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக […]

Continue reading …

இலங்கையில் பரபரப்பு!

Comments Off on இலங்கையில் பரபரப்பு!

பெண் போராளிகளின் உடல்களுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் போராளிகளின் உடைகளுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர் இணைப்பிற்காக கனரக இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. அப்போது, உள்ளே மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், பெண்களின் மேலாடை, பச்சை சீருடை, மற்றும் எலும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Continue reading …

பேஸ்புக்கின் அதிரடி!

Comments Off on பேஸ்புக்கின் அதிரடி!

மெட்டா நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக தனது புதிய சமூக செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதள செயலிகளில் உலகம் முழுதும் பிரபலமாக முன்னணியில் இருப்பது டுவிட்டர். சமீபத்தில் இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அவர் வாங்கியது முதல் டுவிட்டர் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகாரப்பூர்வ புளூ டிக்கை பெற கட்டணம், டுவிட்டர் பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றால் பயனாளர்கள் பலர் டுவிட்டர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். டுவிட்டர் பயனாளர்களை […]

Continue reading …

பிரான்ஸில் வன்முறை; 200 போலீசார் காயம், 1000 பேர் கைது!

Comments Off on பிரான்ஸில் வன்முறை; 200 போலீசார் காயம், 1000 பேர் கைது!
பிரான்ஸில் வன்முறை; 200 போலீசார் காயம், 1000 பேர் கைது!

இன்று 4வது நாளாக பிரான்ஸ் நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாண்டர் புற நகரில் உள்ள ஒரு பகுதியில் விதியை மீறி செயல்பட்டதாக இளைஞர் நீல் (17வயது) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார், இதனால் மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் […]

Continue reading …

உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

Comments Off on உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் என்று நேற்று அட்டவணை வெளியானது குறித்து சில கணிப்புகளை பகிர்ந்து உள்ளார். இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கோப்பையை வெல்ல […]

Continue reading …

அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

Comments Off on அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து […]

Continue reading …

அமெரிக்க அதிபருக்கு மோடியின் பரிசு!

Comments Off on அமெரிக்க அதிபருக்கு மோடியின் பரிசு!

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் […]

Continue reading …

பேஸ்புக் கொடுத்த இழப்பீடு!

Comments Off on பேஸ்புக் கொடுத்த இழப்பீடு!

நீதிமன்றம் பேஸ்புக் கணக்கு காரணமின்றி முடக்கப்பட்டதாக பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உலகம் முழுவதிலும் மக்கள் பலராலும் பயன்படுத்தப்படுவதில் முக்கியமானது பேஸ்புக். அதிகமான பயனாளர்கள் உள்ள நிலையில் பதிவுகள் இடுவதற்கு பேஸ்புக் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அந்த விதிகளை மீறினால் பேஸ்புக் அந்த பயனரின் கணக்கை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்க முடியும். ஆனால் பல சமயம் பேஸ்புக் சரியான காரணமின்றி பயனர்கள் கணக்கை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு […]

Continue reading …

சிறுமி கேம் விளையாட ரூ.52 லட்சமா?

Comments Off on சிறுமி கேம் விளையாட ரூ.52 லட்சமா?

ரூ.52 லட்சத்தை வீடியோ கேம் மீதான மோகத்தில் சிறுமி ஒருவர் காலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே கேமிங் மோகம் தலை விரித்தாடுகிறது. தீவிரமாக நாள் முழுவதும் கேம் விளையாடுவதால் பலர் உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பணத்தை இழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த சிறுமி மொபைல் கேம் விளையாடுவதில் தீவிர மோகத்தில் இருந்து வந்துள்ளார். புதிய கேம்களை வாங்குவதற்காகவும், கேமில் உள்ள கேட்ஜெட்களை […]

Continue reading …