Home » Archives by category » சென்னை (Page 40)

வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Comments Off on வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

Continue reading …

சொத்து வரிகள் உயர்வு!

Comments Off on சொத்து வரிகள் உயர்வு!

தமிழ்நாடு அரசு சொத்தின் மீதான வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்…   சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது. இதேபோல, சென்னையோடு […]

Continue reading …

டீ, காபி விலை சென்னையில் கிடு கிடு உயர்வு!

Comments Off on டீ, காபி விலை சென்னையில் கிடு கிடு உயர்வு!

பால் மற்றும் கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது.   இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. ஆம், கேஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து […]

Continue reading …

400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம்

Comments Off on 400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம்

நடைபாதை, நீரூற்றுகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் என சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து அந்த செய்தியில், “சென்னை சென்ட்ரல், நகரத்தின் வழியாகச் செல்லும் 6 ரயில் பாதைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. 3 புறநகர், ஒரு எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் அமைந்துள்ளன. இப்போது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு […]

Continue reading …

டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு !

Comments Off on டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு !

வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.     சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.     அவருடன் சேர்ந்த தொழிலதிபர் […]

Continue reading …

ஜனவரி 14 – 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை – தமிழக அரசு !

Comments Off on ஜனவரி 14 – 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை – தமிழக அரசு !

ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு.    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது.      இந்நிலையில் இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Continue reading …

கொரோனா சோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Comments Off on கொரோனா சோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது. இந்தியாவில் நமது அண்டை மாநிலங்களாக கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தனியார்  ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தில்லி, ராஜஸ்தான், மராட்டியம் […]

Continue reading …

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் !

Comments Off on பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்புப் பணியில் அடுத்த கட்டமாக 3.1.2022 அன்று 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் சென்னை, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை […]

Continue reading …

நீட் தேர்வு தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம் – வேல்முருகன் !

Comments Off on நீட் தேர்வு தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம் – வேல்முருகன் !

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அத்தேர்வை ரத்து செய்யக்கோரி இதுவரை சமரசமற்ற போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சனநாயக வழிமுறைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தமர்வுகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்ததோடு, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த நிகழ்வுகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முக்கிய பங்காற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02.05.2016 -ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில்,  அரசமைப்புச் […]

Continue reading …

பல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்; தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Comments Off on பல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்; தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு  வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி 2006-ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. […]

Continue reading …