Home » Archives by category » அரசியல் (Page 102)

பிரதமர் மோடி தமிழில் டுவீட்!

Comments Off on பிரதமர் மோடி தமிழில் டுவீட்!

பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வந்துள்ளதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை செயலாற்றுமென நான் உறுதியாக நம்புகின்றேன். இந்திய – இலங்கை நட்புறவின் 75 ஆண்டுகளையும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையையும் […]

Continue reading …

கர்நாடக துணை முதலமைச்சரின் உறுதி!

Comments Off on கர்நாடக துணை முதலமைச்சரின் உறுதி!

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீரை கண்டிப்பாக திறந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் இன்னும் தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து டில்லி சென்று அவர் மத்திய அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக மாநிலத்திற்கு குடிநீர் தேவைக்கான நீரை வைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் […]

Continue reading …

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on கர்நாடகா முன்னாள் முதலமைச்சரின் அறிவிப்பு!

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். பெங்களூரில் சமீபத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் டில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் நடந்தபோதும் அதிலும் குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு கூட்டணிகளும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை குமாரசாமி அதிருப்தியுடன் தெரிவித்திருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து […]

Continue reading …

அண்ணாமலையின் கோரிக்கை!

Comments Off on அண்ணாமலையின் கோரிக்கை!

பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரரின் உத்தரவான தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பது போன்றே இதற்கான உத்தரவை தமிழகப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையில் வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. சிபிஎஸ்இயின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், உயர்நிலை வரை […]

Continue reading …

அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா நடிகர் விஜய்?

Comments Off on அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா நடிகர் விஜய்?

புதிய அரசியல் கட்சி நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச […]

Continue reading …

மாதம் ரூ.2,000: தொடங்கி வைத்தார் முதல்வர்!

Comments Off on மாதம் ரூ.2,000: தொடங்கி வைத்தார் முதல்வர்!

கர்நாடக மாநிலத்தில் மாதம் 2000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிவந்த போது அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் கடந்து சில நாட்களாக நடந்து வந்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து விரைவில் அம்மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிப்பூரில் நிகழ்த்த சம்பவத்தால் தன் இதயம் நொறுங்கி உடைந்து விட்டது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர தாக்குதல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டு என் இதயம் நொறுங்கியது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் என் […]

Continue reading …

மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!

Comments Off on மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சபாநாயகர் அதை ஏற்கவில்லை. உடனே நாடாளுமன்ற எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் நாளே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தான் நாடாளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நாளையும் இதே பிரச்சனையை […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

Comments Off on பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களை பாஜக மில்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த உத்தரவை அடுத்து சபாநாயகர் எதிராக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்து உள்ளதாகவும் […]

Continue reading …

விஜய் அரசியல் குறித்து கருத்துக்கணிப்பு!

Comments Off on விஜய் அரசியல் குறித்து கருத்துக்கணிப்பு!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சி பெரிதாக பாதிப்படையும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் […]

Continue reading …