
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என கூறியுள்ளார். சென்னையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகின்றது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை, தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்படுகிறது” பதிலளித்தார்.
Continue reading …
ஆஸ்திரேலிய பிரதமர் “இந்திய பிரதமர் மோடிதான் எனது பாஸ்” என்று கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் நியூ கினியா நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். நேற்றிரவு ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றார். அவரை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானி என்பவர் வரவேற்ற நிலையில் இருவரும் சிட்னியில் நடந்த -பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி மேடை ஏறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் மோடி மோடி என கரகோஷமிட்டதால் அரங்கமே […]
Continue reading …
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மே 29ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பேரணியாகச் சென்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அடுத்த கட்டமாக தமிழகம் முழுதும் மே29ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கள்ளச்சாராய உயிர் இழப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த […]
Continue reading …
பிரதமர் மோடி ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார். அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற அவருக்கு அங்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டிற்காக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்ற போது பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், நேற்று முன் தினம் அங்கிருந்து பப்புவா நியூ கினியா தீவு நாட்டிற்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியா செல்வது இதுவே முதல்முறை. அங்கு அவர் அந்த நாட்டு […]
Continue reading …
மகா சுசீந்திரன் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக 18 நிர்வாகிகள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. பதவி கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு சிலர் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் தனக்கு விரும்பிய பதவி கிடைக்காததால் […]
Continue reading …
கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சிலர் மரணமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகம் மாவட்டத்தின் புதிய டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Continue reading …
கவர்னர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த […]
Continue reading …
இன்று ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம். இயற்கையோடும், […]
Continue reading …
பாஜக தமிழகத்தில் வரும் 20ம் தேதி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் வேட்டை தமிழகம் முழுதும் காவல்துறை நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வரும் 22ம் தேதி பேரணி நடத்தி […]
Continue reading …
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்திலுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க […]
Continue reading …