Home » Archives by category » அரசியல் (Page 131)

ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து!

Comments Off on ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி வரும் நிலையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இதற்குச் சுமூகத் தீர்வுகாண வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் தனது டுவிட்டரில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று […]

Continue reading …

ராகுல் காந்தி லண்டன் பேச்சுக்கு விளக்கம்!

Comments Off on ராகுல் காந்தி லண்டன் பேச்சுக்கு விளக்கம்!

தற்போது டில்லியில் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நான்கு நாட்களாக எம்பிக்கள் அமளியால் எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை. லண்டனில் ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக உறுப்பினர்களும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை. இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். லண்டன் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம், “இந்தியாவுக்கு எதிராக […]

Continue reading …

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பா?

Comments Off on பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பா?

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாகவும் அப்போது அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தின் புதிதாக ஒருங்கிணைப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 27ம் தேதி சென்னை வரப் போவதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள […]

Continue reading …

3வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

Comments Off on 3வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம் காரணமாக தொடர்ந்து 3வது நாளாக முடங்கியுள்ளது. அதானி விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் மீண்டும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியதாக தெரிகிறது. ஒரு பக்கம் பாஜக ராகுல் காந்தி மீது உரிமை […]

Continue reading …

அமைச்சர் மா சுப்பிரமணியனின் அறிவிப்பு!

Comments Off on அமைச்சர் மா சுப்பிரமணியனின் அறிவிப்பு!

அமைச்சர் மா சுப்பிரமணியன் வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்பது பற்றி தகவல்கள் வெளியிட்டுள்ளார். புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுவை போலவே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. புதுவை மாநிலத்தை போலவே தமிழகத்திலும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் […]

Continue reading …

அமமுக கட்சியின் 6ம் ஆண்டு தொடக்கவிழா!

Comments Off on அமமுக கட்சியின் 6ம் ஆண்டு தொடக்கவிழா!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி டிடிவி.தினகரனால் தொடங்கப்பட்ட கட்சி அமமுக. இக்கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னையிலுள்ள அமமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆளுங்கட்சியான திமுக அரசை விமர்சித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே […]

Continue reading …

பாஜகவினர்களுக்கு ஜேபி நட்டா கண்டிப்பு!

Comments Off on பாஜகவினர்களுக்கு ஜேபி நட்டா கண்டிப்பு!

பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அதிமுக தலைமை குறித்தோ, அதிமுக தொண்டர்கள் குறித்தோ கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த சில நாட்களாக ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறியும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழகம் வந்துவிட்டு அதன் பிறகு டெல்லி திரும்பிய ஜேபி நட்டா தற்போது தமிழக பாஜகவினருக்கு […]

Continue reading …

அரசியல்வாதிகளுக்கு இது தலைக்குனிவு: விஜயகாந்த்!

Comments Off on அரசியல்வாதிகளுக்கு இது தலைக்குனிவு: விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நடந்த +2 பொது தேர்வில் தமிழ் பாடத்தை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தலைகுனிவு என்று தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற +2 தேர்வில் 50 ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதவில்லை. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்து நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் விஜயகாந்த், “தமிழ் தேர்வை ஐம்பதாயிரம் […]

Continue reading …

ஆவேசமான டி.ஆர்.பாலு!

Comments Off on ஆவேசமான டி.ஆர்.பாலு!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசிய பிறகு அளித்த பேட்டியில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் […]

Continue reading …

மனைவிக்கு 1000 மடங்கு பவர் இருப்பதாக கூறிய அண்ணாமலை!

Comments Off on மனைவிக்கு 1000 மடங்கு பவர் இருப்பதாக கூறிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை விட 1000 மடங்கு தன் மனைவிக்கு பவர்புல்லாக இருப்பதாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடன் என்னை ஒப்பிடவில்லை. ஜெயலலிதா ஒரு தனித்தன்மை உள்ள தலைவர், அவர் தவறான முடிவு எடுத்தால் கூட அந்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார். ஏனெனில் அவர் தலைவர். அதே போல் தான் நானும் ஒரு முடிவை எடுத்தால் பின்வாங்க மாட்டேன். அதற்காக நான் ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை, ஒவ்வொரு கட்சிக்கும் […]

Continue reading …