Home » Archives by category » இந்தியா (Page 126)

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 16,30,590 மதிப்பில் 310 கிராம் எடையிலான தங்கத்தை தமது உடலில் அவர் மறைத்து எடுத்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6,00,200 மதிப்பிலான மின்னணு பொருட்களையும் முறைகேடாக மறைத்து […]

Continue reading …

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !

Comments Off on படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன், தமிழக மீன்வள இயக்குனர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், […]

Continue reading …

சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Comments Off on சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி – அரும்பணி.  அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன், கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள். 

Continue reading …

ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

Comments Off on ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. நாடு முழுவதும் 19 கட்சிகளின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் 3.125 கிலோ தங்கம் பறிமுதல் !

Comments Off on சென்னை விமான நிலையத்தில் 3.125 கிலோ தங்கம் பறிமுதல் !

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த பிரத்யேக தகவலின் அடிப்படையில் 10.09.2021 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஈகே-542 எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 34 வயது பயணி மற்றும் எஃப்இசட்-447 விமானத்தில் 10.09.2021 அன்று காலை 4 மணிக்கு சென்னை வந்த 35 வயது பயணி ஆகியோர் விமான நிலைய வெளி வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.‌ அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அவர்களது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ. 1.33 கோடி மதிப்பில் 3125 கிராம் எடையில் […]

Continue reading …

2500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on 2500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2021) முகாம் அலுவலகத்திலிருந்து, அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள  NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20-க்கும் […]

Continue reading …

7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !

Comments Off on 7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் நேற்று காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும். உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தால் ரூ 27.99 கோடி மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் அவற்றுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் […]

Continue reading …

ஃபோர்டு மகிழுந்து ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on ஃபோர்டு மகிழுந்து ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு மகிழுந்து ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது, இது திரும்பப்பெறப்பட வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு மகிழுந்து நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் மகிழுந்து ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில்   சுமார் 15 […]

Continue reading …

திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் !

Comments Off on திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலிபிரி அருகில் உள்ள பூதேவி தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன் களை […]

Continue reading …