
கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளை ஈடுபடுத்தி, உள்ளூர் மொழிகளில், பரவலான மல்டிமீடியா பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். 36-வது தேசிய கண் தான இருவார விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அவர், நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி பற்றிக் குறிப்பிட்டார். […]
Continue reading …
2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார். இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், திரு. அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் திரு. ஓங்கார் […]
Continue reading …
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது: “இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.“
Continue reading …
விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும் குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின் […]
Continue reading …
ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரனுமான கேஷவ் தேசிராஜு இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள […]
Continue reading …
சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி, ரூ. 902.50 ஆக நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போததக்குறைக்கு […]
Continue reading …
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். […]
Continue reading …
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி : தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Continue reading …
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்று என்றும், புதிய கப்பல் வடிவமைப்பு முதல் கட்டமைப்பு வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதென்றும் கூறினார். இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்காக அல்லாமல், 7 கப்பல்களுக்கான ஒப்பந்தம் தனியார் துறை நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. […]
Continue reading …
இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படத்தை இயக்கி நடித்து வருகிறார். வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல […]
Continue reading …