
*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.* ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு. பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து.
Continue reading …
நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்தது. இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், காஷ்மீரில் உள்ள அனந்தநாக்-ரஜோரி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் […]
Continue reading …
வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்துள்ளார் அவரது மகன். ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய், தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அடிக்கடி லட்சுமிபாயுக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, […]
Continue reading …
மதுபான வழக்கில் சிக்கி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தற்போது திகார் சிறையில் உள்ளார். வழக்கறிஞர் அமர்ஜித் குப்தா என்பவர் சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொளி வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க […]
Continue reading …
கங்கை நதியில் பாம்பு கடிபட்ட இளைஞரை மூடநம்பிக்கையால் மிதக்கவிட்டதால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான நோய்களுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் நவீன மருத்துவமுறைகள் இருந்தாலும், சில மூடநம்பிக்கைகள் காரணமாக மோசமான விளைவுகளை தேடிக் கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியைச் சேர்ந்த வருமாவரித்துறை ஊழியரான விஜய் சிங்கின் இளைய மகன் மோஹித் அனுப்சாகர் கல்லூரியில் […]
Continue reading …
டில்லி மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகவும், ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் விதிகளுக்கு மீறியிருப்பதால் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சகம் டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளியே என்று விளக்கமளித்துள்ளது. இன்று மின்னஞ்சல் மூலம் டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய […]
Continue reading …
பொதுமக்கள் கேரளாவில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஒருவர் “முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஏசி இருந்தது ஆனால் இப்போது வீட்டுக்கு நான்கு ஏசி உள்ளது அதனால் தான் மின்தடை ஏற்பட்டது” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மின்தடை குறித்து கூறும்போது, “மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு ஏசி இருந்த […]
Continue reading …
பிரதமர் மோடி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பரவி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து நரேந்திர மோடி பேசாமல் எப்போதும் போல் மவுனம் காத்து வருகிறார். இது குறித்து […]
Continue reading …
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளது. ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான பாஜகவின் ஆண்டு பட்ஜெட், […]
Continue reading …