Home » Archives by category » இந்தியா (Page 31)

லஞ்சம் வாங்கும் எம்பி எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Comments Off on லஞ்சம் வாங்கும் எம்பி எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

உச்சநீதிமன்றம் லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கில்லை என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் வாங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்க்கையில் நேர்மையை அழிக்கிறது என்று கூறிய உச்சநீதிமன்றம் லஞ்சம் வாங்குவதே குற்றமாகும் […]

Continue reading …

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே கூட்டு பாலியல் பலாத்காரம்!

Comments Off on ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே கூட்டு பாலியல் பலாத்காரம்!

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பானிய நாட்டுப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். குருமஹத் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வெளியான தகவலில், பாதிக்கப்பட்ட ஸ்பானிய நாட்டுப் பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல், தங்களை வழிமறித்து, தன்னை இழுத்துச் சென்று ஆளில்லாத இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை […]

Continue reading …

பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை!

Comments Off on பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை!

போலீசார் சிறை கைதி உள்ளிட்ட நான்கு பேரிடம் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் உணவக பணியாளர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் […]

Continue reading …

அரசியலிலிருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவிப்பு!

Comments Off on அரசியலிலிருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவிப்பு!

தீவிர அரசியலிலிருந்து பாஜக எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிழக்கு டில்லியில் எம்பியாக இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2024ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு சீட் வழங்குவது சந்தேகம் என பாஜக வட்டாரங்கள் கூறி வருகிறது. திடீரென அரசியலிலிருந்து விலகும் முடிவை கவுதம் கம்பீர் எடுத்துள்ளார். […]

Continue reading …

திடீரென மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி?

Comments Off on திடீரென மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி?

பிரமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தபோது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த போது ராஜ்பவனில் மோடி -மம்தா சந்திப்பு நடந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி “பிரதமர் முன் தலை வணங்க மம்தா வந்திருக்கிறார், பிரதமரை மகிழ்விக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார், அவர் என்ன செய்தாலும் மோடி யாரையும் கொள்ளையடிக்க […]

Continue reading …

டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்!

Comments Off on டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்!

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நாக்பூர் அருகே சாலையோர டீக்கடையில் டீ குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த டீக்கடைக்காரர் பில்கேட்ஸ் யார் என்றே தெரியாமல் அவருக்கு டீ வழங்கினாராம். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது நாக்பூர் சாலையோர டீக்கடை அருகே திடீரென காரை […]

Continue reading …

முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த  விருப்ப ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.

Comments Off on முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த  விருப்ப ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.

முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த  விருப்ப ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இம்தியாஸ், விருப்ப ஓய்வு பெற்று இன்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார்

Continue reading …

ரிலையன்ஸுடன் இணைந்த வால்ட் டிஸ்னி!

Comments Off on ரிலையன்ஸுடன் இணைந்த வால்ட் டிஸ்னி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் உலக பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது இந்திய ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உள்ளிட்ட சேவைகளில் ஒன்றிணைகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Viacom 18 இந்தியா முழுவதிற்கும் செய்தி சேனல்கள், எண்டெர்டியின்மெண்ட், ஸ்போர்ட்ஸ் சேனல்களை வழங்கி […]

Continue reading …

விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்!

Comments Off on விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்!

தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம், நிலவிற்கு சந்திரயான், செவ்வாய்க்கு மங்கள்யான் என பல விண்கலன்களை விண்ணில் ஏவி வல்லரசு நாடுகளுக்கு நிகரான முயற்சிகளை குறைந்த பொருட்செலவில் செய்து காட்டியுள்ளது. அவ்வகையில் இந்தியாவிலிருந்து இஸ்ரோ மூலமாக முதன்முறையாக விண்வெளிக்கு இந்திய […]

Continue reading …

இனி திமுகவை தமிழகத்தில் பார்க்க முடியாது; பிரதமர் மோடி!

Comments Off on இனி திமுகவை தமிழகத்தில் பார்க்க முடியாது; பிரதமர் மோடி!

பிரதமர் மோடி திமுகவை இனி தமிழகத்தில் பார்க்க முடியாது என நெல்லையில் ஆவேசமாக பேசியுள்ளார். நேற்று பல்லடம் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த மோடி பேசினார். அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது “இனி திமுகவை […]

Continue reading …