
சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் காட்டுப் பகுதியில் மீண்டும் இருப்பதால் வனத்துறையினர் திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்தனர். மீண்டும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கண்காணிப்பு கேமராவில் இருந்து பதிவான காட்சிகளை வெளியிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
Continue reading …
லாரியில் வைத்து பழுதடைந்த விமானத்தை எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டது. இதையடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழைய ஏர் இந்தியா விமானத்தை மும்பையிலிருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு […]
Continue reading …
பிரதமர் மோடி அயோத்தி ரயில் நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டும், புனரமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தை வரும் 30ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோயிலுக்கு இந்தியா முழுதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அயோத்தி ரயில் நிலையம் கடந்த […]
Continue reading …
28 ஆண்டுகள் கழித்து மாமியாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷி என்பவர் சென்னைக்கு வேலை விஷயமாக வந்த இடத்தில் இந்திரா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் 1994ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. ஜோஷியின் மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றபோது ஜோஷி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோஷி தனது மனைவியை கத்தியால் […]
Continue reading …
மர்ம நபர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் சக்திக்கு காந்ததாஸ் ஆகியோர் ராஜினாமா செய்யாவிட்டால் குண்டு வைப்போம் என மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு வந்த ஈமெயிலில், “ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்ததாஸ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி உள்ளிட்ட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம். சக்தி காந்ததாஸ், நிர்மலா சீதாராமன் […]
Continue reading …
தற்போது மீண்டும் இந்தியாவில் கொரானா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதித்த 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. நாடு முழுதும் தற்போது 454 பேர் கொரோனாவால் […]
Continue reading …
நாளை காங்கிரஸ் கட்சி வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்க ஆரம்பித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில […]
Continue reading …
டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் மர்ம வெடிச்சத்தம் கேட்டதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்கள் சகிதம் அப்பகுதியை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் கொடியில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில் என்ன எழுதியிருந்தது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் இந்தியா செல்லும் இஸ்ரேல் மக்களை எச்சரித்துள்ளது. புத்தாண்டிற்காக […]
Continue reading …
அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட இரண்டு செயலிகள் 2023ம் ஆண்டுக்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகள் பேஸ்புக் அலுவலகத்திற்கு சொந்தமாக உள்ளன. கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை ஐந்து நாட்களில் 10 கோடி பேர் இன்ஸ்டால் செய்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இச்செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்தனர். 2023ம் ஆண்டில் அதிகமாக […]
Continue reading …
மூன்று புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அச்சட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த சட்டங்கள் உடனே நடைமுறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. 150-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோது மூன்று புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஜனாதிபதி திரௌபதி முர்மு இச்சட்டங்களுக்கு […]
Continue reading …