Home » Archives by category » இந்தியா (Page 44)

வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

Comments Off on வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

மத்திய குழு வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழகத்திற்கு தெரிவித்துள்ளது. மத்திய குழு சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் சேதம் குறித்து கணக்கிட சென்னைக்கு வருகை தந்தது. பின்னர் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நாங்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம். பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள […]

Continue reading …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது!

Comments Off on அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது!

முன்னாள் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் இந்துக்களின் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் 16ம் தேதி அதற்கான பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக 4000 துறவிகள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் கவிதா தனது வலைதள […]

Continue reading …

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

Comments Off on சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி “இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது, இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு, ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு என நாங்கள் கருதுகிறோம், 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால […]

Continue reading …

பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

Comments Off on பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

ரஷ்யா அதிபர் புதின் இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “இந்தியாவின் நலன் இந்திய மக்களை நலம் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது. அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். மோடியை அச்சுறுத்த […]

Continue reading …

போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி!

Comments Off on போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி!

ஒன்றரை ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் சுமார் போலி டோல்கேட் இயங்கி வந்ததாகவும் அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் போலீஸ் சுங்கச்சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாகவும் அதற்கு தனி சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பி […]

Continue reading …

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

Comments Off on ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதியளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவுமுறை இந்திய தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. யுபிஐ மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் மொபைல் மூல்ம நாம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தேவையில்லை. இதனால் மக்கள் இப்போ பே, பேடிஎம், பாரத் பே, கூகுள் பே போன்ற […]

Continue reading …

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவிநீக்கம்!

Comments Off on திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவிநீக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிர்வாக பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பரிந்துரை அறிக்கை மீது வாக்கெடுப்பு […]

Continue reading …

வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Comments Off on வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு எட்டியுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் […]

Continue reading …

வரதட்சணை கேட்டதால் மணமகள் தற்கொலை!

Comments Off on வரதட்சணை கேட்டதால் மணமகள் தற்கொலை!

கேரளாவில் காதலனனின் குடும்பத்தினர் 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்த சகானா என்ற மருத்துவர் தனது சக மருத்துவரான ரூவாயிஸ் காதலித்து வந்தார். இருவரது பெற்றோர்களும் திருமணம் பேச்சு வார்த்தை நடத்தினர். காதலன் பெற்றோர்கள் அதிக வரதட்சனை எதிர்பார்த்ததாக தெரிகிறது. குறிப்பாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம் மற்றும் […]

Continue reading …

அரசு பேருந்தில் டிஜிட்டல் முறை!

Comments Off on அரசு பேருந்தில் டிஜிட்டல் முறை!

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் ஜனவரி முதல் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் மூலம் டிக்கெட் வாங்கும் முறை வரும் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இனி அரசு பேருந்துகளில் டிக்கெட் பெற கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் க்யூ ஆர் கோடுகள் மூலமாகவும் பேருந்தில் டிக்கெட் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில போக்குவரத்துத்துறை இது குறித்து, “டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி […]

Continue reading …