
கேரளாவில் சமீபத்தில் பெண் டாக்டர் நோயாளி போல் வந்தவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. எர்ணாகுளத்தில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரளா மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிகாரிகள், போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இவர் இன்று மானாமதுரையில் செய்தியாளர்களிடம், “போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தெரியாமல் இருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்ற 1500 பேரை எப்படி கைது செய்திருக்க முடியும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வாங்குவது தவறில்லை. பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது, மற்ற கட்சி […]
Continue reading …
மத்திய அமைச்சர் எல்.முருகன் “கேன்ஸ்’’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டதில், “ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் நடைபெறும். இவ்வாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 27ம் தேதி வரை என மொத்தம் 12 நாட்கள் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழாவில், இந்தியாவின் சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா […]
Continue reading …
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் கேரள மற்றும் தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் […]
Continue reading …
இலவச புரமோஷனாக அமைந்துள்ளது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு பலதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள். இதையடுத்து இத்திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளதால், நாளை முதல் 37 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பிரதமர் மோடி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதையடுத்து இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் […]
Continue reading …
இன்று கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளுடனான வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை முதலாக வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் மக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. […]
Continue reading …
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டிரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து இம்முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் துரிதமாக ரத்தத்தை டிரோன் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடத்தப்பட்டது. இந்த டிரோன் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தம் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பது குறித்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சியை […]
Continue reading …
ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பின்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து போவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து பல நாட்டு அதிபர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்னணி நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது. வரும் ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக […]
Continue reading …
இன்று கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கருத்து நிலவி வந்தது. தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக தான் அதிக இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா […]
Continue reading …
நாளை நடைபெறவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன. பாஜக அரை லிட்டர் பால் இலவசம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் கொடுத்தது. கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பிரியங்கா காந்தி அங்கும் சில இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளார். […]
Continue reading …