
ஒய்எஸ்ஆர் ஷர்மிளா தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், கேசிஆர் தான் தலிபான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷர்மிளா கடந்த சில நாட்களாக தெலுங்கானா அரசை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். ஷர்மிளா கூறுகையில், “தெலுங்கானா முதலமைச்சர் என்னை பார்த்து பயப்படுகிறார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. எனது நடைப்பயணம் 3000 […]
Continue reading …
மும்பையில் இன்று இந்தியாவின் முதல் இ-டபுள் டக்கர் பேருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த டபுள் டக்கர் பேருந்தில் 90 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். மும்பை மாநகர போக்குவரத்து கழகம் 200 ‘இ-டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல் கட்டமாக சில பேருந்துகள் மட்டும் மும்பையில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து […]
Continue reading …
உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புனே நகரில் கூகுளின் கிளை அலுவலகம் உள்ளது. இங்குள்ள முந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 11வது மாடியிலிருந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில், நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துணை ஆணையர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு, சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் […]
Continue reading …
இன்று சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் காட்டிய நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மோசமான சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது. அதானி குழுமங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு […]
Continue reading …
இந்தியாவில் முதன் முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சலால் ஹைமானா என்ற பகுதியில் இந்தியாவில் முதல் முறையாக 5.9 மில்லியன் தான் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய சுரங்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன் பேட்டரிகள், எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரிகள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கு லித்தியம் மிகவும் முக்கியம் என்ற நிலையில் தற்போது இந்தியாவிலேயே 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு […]
Continue reading …
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் டிரோனைசுட்டு வீழ்த்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் டிரோன் ஒன்று வருவதை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதையடுத்து அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனில் 3 கிலோ ஹெராயின் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]
Continue reading …
வருமானவரித்துறை ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் வென்ற நபர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டுகள் அறிவுசார் விளையாட்டுகள் என அவ்விளையாட்டு நிறுவனங்கள் கூறி வந்தாலும், சூதாட்டங்கள் என புகார்களும் இருந்து வருகிறது. இந்தியாவில் இதுபோன்று ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் வெற்றி பெறுபவர்களுக்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. வருமானவரி சட்டம் 1961 […]
Continue reading …
மொட்டை கடுதாசி மூலம் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதே வழக்கமாக வைத்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த தாயும் மகனும். சமீபத்தில் கேரளாவில் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமீபத்தில் கடுதாசி ஒன்று வந்துள்ளது. அதில் ஆட்சியர் அலுவகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக கலெக்டர் அலுவலகம் முழுதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அப்படி ஏதும் வெடிகுண்டு அங்கில்லை. அதை தொடர்ந்து மொட்டை கடுதாசி அனுப்பியது யார் என போலீசார் விசாரணையை […]
Continue reading …
உச்சநீதிமன்றத்தில் பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. “இந்தியா தி மோடி கொஸ்டீன்” என்ற ஆவணப்படம் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்டது. இந்த ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுதும் இதுபேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த […]
Continue reading …
சிறுத்தை ஒன்று உத்தர பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்திற்குள் புகுந்த அங்கிருந்தவர்களை ஆவேசமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றம் வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் அங்கு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுத்தை ஒன்று நீதிமன்றத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே நுழைந்த சிறுத்தை கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்க தொடங்கியுள்ளது. இதனால் பீதியில் அலறியவாறு மக்கள் நாலா புறத்திலும் தெறித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து […]
Continue reading …