Home » Archives by category » சென்னை (Page 15)

சென்னை ஐகோர்ட்டின் வாசல்கள் மூடப்பட்டது ஏன்?

Comments Off on சென்னை ஐகோர்ட்டின் வாசல்கள் மூடப்பட்டது ஏன்?

திடீரென சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வாசல்களையும் மூட உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் சென்னை பூக்கடை அருகே ஐகோர்ட் கட்டப்பட்ட நிலையில் இந்த பகுதியில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் உயர்நீதிமன்ற வளாகத்தின் பாதையை பயன்படுத்த தொடங்கினர். நீதிமன்றமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் வருங்காலத்தில் நீதிமன்ற வளாக பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் மூடப்படும் என்று […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் திருமணமான மகன் இறந்துவிட்டால் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வயதான தாய் தனது மகனின் சொத்தில் தனக்கு உரிமை உண்டு என்று நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உண்டு என்று தீர்ப்பளித்தது. ஆனால் மறைந்த மோசஸ் மனைவி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு […]

Continue reading …

சென்னையில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

Comments Off on சென்னையில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

இன்று சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள 94 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் உள்ளனர். சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை செல்லும் வழித்தடத்தில் பட்டாபிராமம், அம்பத்தூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து இன்று இரவு 9.25, 10, 10.20, 10.35, 11.15, 11.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.15 மணிக்கு […]

Continue reading …

சென்னை மெட்ரோ டிக்கெட் இனி போன்பேயில்!

Comments Off on சென்னை மெட்ரோ டிக்கெட் இனி போன்பேயில்!

அவ்வப்போது சில வசதிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு அறிவித்து வருகிறது. தற்போது போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் ஏற்கனவே போன்பே செயலி மூலம் ரீசார்ஜ் கூப்பன் எடுக்கும் வசதி உள்ளது. இதையடுத்து தற்போது சென்னையில் போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன்பே செயலியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் கூப்பன் உள்ளதாகவும் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோவா?

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோவா?

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். அவருக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

Comments Off on உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி நேற்றிரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால், மழை நீர் தேங்குவது தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிக்கும் போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட சேதங்களை சேதங்களை சரிப்படுத்த மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சி […]

Continue reading …

வீட்டிற்குள் தஞ்சம்புகும் பாம்பு, தேள்!

Comments Off on வீட்டிற்குள் தஞ்சம்புகும் பாம்பு, தேள்!

இன்று தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது கனமழை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம் சுற்றுப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக ஸ்ரீநகர், கனகபரமேஸ்வரி நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அப்பகுதி மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். மழைநீர் செல்ல போதிய வடிகால் இல்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதேபோல் சென்னையில் இரவு […]

Continue reading …

கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

Comments Off on கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

நாளை முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகைக்காக செல்பவர்களின் வசதிக்காக மாலை நேரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட நெரிசல்மிக்க நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயிலின் இரண்டு தடங்களிலும் 9 நிமிட இடைவேளைக்கு […]

Continue reading …

வேகவரம்பை மீறும் வாகனங்களுக்கு அபராதம்!

Comments Off on வேகவரம்பை மீறும் வாகனங்களுக்கு அபராதம்!

வாகனங்களின் வேக வரம்பு நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது இதற்காக அபராதம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பெரு நகர போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக அறிவித்தது. அதில், ‘இலகுரக வாகனங்கள் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வகனங்கள் 50 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல […]

Continue reading …

பல நூறு மதிப்புடைய நிலங்கள் மீட்பு!

Comments Off on பல நூறு மதிப்புடைய நிலங்கள் மீட்பு!

ரூ.800 கோடி மதிப்பில் சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 4.5 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலமருகில் ஆக்கிரமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு ஆட்சியரரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்ரமிப்பு நிலத்தை மீட்டனர். 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இயங்கி வந்த அரசுடையை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்ளிட்ட 30 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …