ஆகஸ்டு 27ம் தேதி முதல் சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கிடையே இயங்கி வரும் மின்சார ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ரூபாய் 279 கோடி செலவில் நான்காவது ரயில் தடம் சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூருக்கு இடையே அமைக்கப்பட்டவுள்ளது. இப்பணியை 7 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியின் காரணமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும் மீண்டும் சேவை […]
Continue reading …பெற்ற தாயே தனது 23 வயது மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயலைச் சேர்ந்த செல்வி 38 வயது பெண்ணுக்கு 23 வயதில் பூவரசன் என்ற மகன் இருந்தார். அடிக்கடி செல்வி மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று திடீரென மன அழுத்தம் ஏற்பட்ட செல்வி தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் தன்னையே இரும்பு […]
Continue reading …10 வயது பள்ளி மாணவி தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோவிலாம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி தாய் கண் முன் உயிரிழந்தார். தண்ணீர் லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. 10 வயது சிறுமி தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தபோது, வேகமாக […]
Continue reading …மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை, வேளச்சேரியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டனி, எக்கனாமிக்ஸ் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- […]
Continue reading …சென்னைக்கு ஆந்திராவிலிருந்து வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து பயணிகளிடம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் வந்த இரண்டு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா பகுதியில் திடீரென கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் நகைகளை பறித்து சென்றதாக தெரிகிறது. பயணிகள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி […]
Continue reading …சென்னையைச் சேர்ந்த வாலிபர் இளம் பெண்ணுக்கு நிர்வாண வீடியோ அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சேர்ந்த திலீப் குமார் 25 வயது நபர் இளம் பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவரை விட்டு விலகவே ஒரே ஒருமுறை வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினால் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் அவ்வாறு தோன்ற […]
Continue reading …இலங்கையை சேர்ந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகஜன்லட்டி என்ற 43 வயது பெண் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல இருந்த போது விமானத்தில் பாதுகாப்பு பரிசோதனை பிரிவில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் அதேபோல் சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்தபோது திடீரென மயங்கி […]
Continue reading …மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருமணத்திற்கு பின்னர் கணவன் சேர்க்கும் சொத்துக்களில் மனைவிக்கும் சமபங்கு உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இச்சட்டத்தை பின்பற்றி சட்டம் ஏற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் வழங்கிய இத்தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மனைவியின் உழைப்பை மதிப்பற்றதாக எப்படி பார்க்க முடியும் என்ற வாதங்களை நீதிமன்றம் முன் […]
Continue reading …பெண் சமோசா வியாபாரி சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.அவரது இறுதி ஊவலத்தின்போது, அவரது தங்கை நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவலாகி வருகிறது. சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு இவர் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு […]
Continue reading …வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. பேருந்து நிலையத்தின் 1வது பிளாட்பார்மில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் வைத்துள்ளார். இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு […]
Continue reading …