Home » Archives by category » சென்னை (Page 23)

பத்மாவதி தாயார் கோவிலில் மக்கள் கூட்டம்!

Comments Off on பத்மாவதி தாயார் கோவிலில் மக்கள் கூட்டம்!

சமீபத்தில் சென்னையில் தியாகராய நகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய […]

Continue reading …

செல்போன் டவரை எடைக்குப் போட்ட வீட்டு உரிமையாளர்கள்!

Comments Off on செல்போன் டவரை எடைக்குப் போட்ட வீட்டு உரிமையாளர்கள்!

சென்னையில் மூவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. வாடகை பாக்கியால் செல்போன் டவரை எடைக்கு போட்டு காசாக்கியுள்ளனர் வீட்டின் உரிமையாளர்கள். சென்னை கோயம்பேடு வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன். இவர்கள் மூவருக்கும் சொந்தமான பில்டிங்கின் மாடியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் சார்பில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கென மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் நிறுவனம் […]

Continue reading …

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம்!

Comments Off on சென்னையில் திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதியில் இருக்கும் பத்மாவதி தாயார் கோவிலைப் போல் சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டி இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானவர் திரண்டனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. ரூபாய் 10 […]

Continue reading …

புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Comments Off on புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்தில் ‘முத்தமிழறிஞர் கருணாநிதி ஸ்டேண்டை’ திறந்துவைத்தார். சென்னை மெரினாவுக்கு அருகிலுள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூரு கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ள […]

Continue reading …

சென்னை கல்லூரி மாணவி கைது!

Comments Off on சென்னை கல்லூரி மாணவி கைது!

சென்னை கல்லூரி மாணவி பாலியல் தரகர் வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரகாஷ் என்பவரை காதலித்தார். பிரகாஷ் பாலியல் தரகர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரை காதலித்த மாணவி, பின்னர் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தெரிகிறது. தனது […]

Continue reading …

ஆந்திர மாணவர் ஐஐடியில் தற்கொலை!

Comments Off on ஆந்திர மாணவர் ஐஐடியில் தற்கொலை!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நிலையில் […]

Continue reading …

ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை, அதில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கத்தான் செய்வார்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்த ஆன்லைன் மோகம் மக்கள் மத்தியில் குறையவில்லை. சென்னையை அடுத்த சேலையூரிலுள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் (36) கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் மனவிரக்தி கொண்ட அவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு லோன் ஆப்களில் அவர் கடன் பெற்று சூதாட்டத்தில் விளையாடி […]

Continue reading …

அடகு கடையில் மோடி செய்த சீரியல் நடிகை கைது!

Comments Off on அடகு கடையில் மோடி செய்த சீரியல் நடிகை கைது!

சீரியல் நடிகை ஒருவர் சென்னையில் பல நகை அடகுக்கடைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள பெரம்பூரில் பட்டேல் ரோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் கண்ணையா லால். சமீபத்தில் இவரது கடைக்கு பெண் ஒருவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். தாலியிலுள்ள குண்டுகளை அடமானம் வைத்து ரூ.40 ஆயிரம் கேட்டுள்ளார். அதை சோதித்து பார்க்க கண்ணையா லால் முயன்றபோது தாலி நகையை உரசினால் சேதமடையும் என செண்டிமெண்டாக பேசியுள்ளார். இதனால் நகையை […]

Continue reading …

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி!

Comments Off on ரயில் மோதி கல்லூரி மாணவி பலி!

தாம்பரம் ரயில் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக ரயில்கள் மோதி மனித உயிர் பலியாகி வருவது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பின்றி கடக்கக்கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பயணிகள் கவனக்குறைவாக ரயில் தண்டவாரத்தை கடந்து செல்வதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தாம்பரத்தை […]

Continue reading …

சென்னை மாநகராட்சியின் திட்டம்!

Comments Off on சென்னை மாநகராட்சியின் திட்டம்!

சென்னை மாநகராட்சி 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சோழிங்கநல்லூர் மாதவரம் திருவெற்றியூர் மணலி அம்பத்தூர் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகளில் 800 வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகள் செய்து தரப்படும் என்றும் இதன் மூலம் 300 ஆசிரியர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு […]

Continue reading …