Home » Archives by category » சென்னை (Page 25)

வட மாநில இளைஞர் படுகொலை!

Comments Off on வட மாநில இளைஞர் படுகொலை!

சென்னை வேளச்சேரியில் உள்ள விஜிபில் செல்வா நகரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்(29) வசித்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி காய்கறிகள் வாங்கிக் கொண்டு சாலையில் வரும்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் நடனமாடியுள்ளார். அதில் ஒருவரது கால் ரமேஷின் மீது பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இளைஞர்கள் ரமேஷை பதிலுக்கு தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலைன்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]

Continue reading …

கல்வி அலுவலரின் முக்கிய அறிவிப்பு!

Comments Off on கல்வி அலுவலரின் முக்கிய அறிவிப்பு!

முதன்மை கல்வி அலுவலர் சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது பிப்ரவரி நான்காம் […]

Continue reading …

சென்னை பிவிஆர்&ரின் புது முயற்சி!

Comments Off on சென்னை பிவிஆர்&ரின் புது முயற்சி!

சென்னை பிவிஆர் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் தியேட்டர்கள் திறப்பதற்காக முடிவு செய்துள்ளது. பிவிஆர் திரையரங்க வளாகம் நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட தியேட்டர்கள் திறந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில்தான் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளதாக பிவிஆர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்டணம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் […]

Continue reading …

ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

Comments Off on ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

சென்னையில் உள்ள ஏடிஎம்மில் ரூ.200 பதிவிட்டால் ரூ.500 வந்ததால் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள அம்பத்தூரில் ஒரு ஏடிஎம்மில் இளைஞர் வருவார் 200 பணம் எடுக்க சென்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் 200 ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது அனைவருக்கும் 500 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் […]

Continue reading …

பாஜக பிரபலம் நீதிபதியாக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

Comments Off on பாஜக பிரபலம் நீதிபதியாக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மூத்த வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக பிரபலம் நியமனம் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரி என்பவரை சென்னை ஹை கோர்ட் நீதிபதியாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ள நிலையில் அந்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று விட்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக […]

Continue reading …

கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

Comments Off on கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்துள்ளது. ஜேசிபி எந்திரம் மூலமாக நேற்று கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து இடிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது வெளிப்புற சுவர் இடிந்து நடைபாதையில் சென்று கொண்டிந்த மூன்று பேர் மேல் விழுந்தது. அதில் ஒருவர் […]

Continue reading …

அன்புமணி ராமதாஸின் கருத்து!

Comments Off on அன்புமணி ராமதாஸின் கருத்து!
அன்புமணி ராமதாஸின் கருத்து!

பள்ளிகளைச் சுற்றி புகைப்பது அதிகரித்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தர்மபுரி எம்பியும், பாமக தலைவருமான அன்புமணி ராமதஸ் தனது டுவிட்டரில், “சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது! ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத்தான் நான் […]

Continue reading …

இணையதளத்தின் மூலம் பாலியல் தொல்லை!

Comments Off on இணையதளத்தின் மூலம் பாலியல் தொல்லை!

முக்கியமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்புப் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரைக் காணவில்லை என மாணவியின் தந்தை போலீஸில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவி பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீசார், மாமல்லபுரம் பகுதியில் அப்பெண் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே, […]

Continue reading …

பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் பேட்டி!

Comments Off on பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் பேட்டி!

மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் விகே சிங் பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அந்த பகுதி விவசாயிகள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் நெல்லையில் […]

Continue reading …

நல்லகண்ணு உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on நல்லகண்ணு உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நல்லகண்ணு தனது 97வது பிறந்தநாளை கொண்டாடினார். வயோதிகம் மற்றும் சில உடல் நலப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நல்லகண்ணு. அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து […]

Continue reading …