Home » Archives by category » சென்னை (Page 29)

கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை!

Comments Off on கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை!

கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்படும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதை நாளை அதாவது நவம்பர் 27ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா போலவே விரைவில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு […]

Continue reading …

நகைக்கடையில் கொள்ளை!

Comments Off on நகைக்கடையில் கொள்ளை!

நகைக்கடையில் திருடன் சட்டையே போடாமல் வந்து திருட்டை நடத்தி போன சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வந்த ப்ளூஸ்டோன் என்ற நகைக்கடையில் புகுந்த கொள்ளையன் அங்கிருந்த ஷோகேஸில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை திருடியுள்ளான். மேலும் லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பியுள்ளான். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சில மணி நேரத்தில் […]

Continue reading …

தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் புதிய திட்டம்!

Comments Off on தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் புதிய திட்டம்!

இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இத்திட்டம் இன்று அதாவது நவம்பர் 26 முதல் தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே […]

Continue reading …

மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல்!

Comments Off on மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல்!

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிராட்வே பகுதியில் உள்ள உரிமம் புதுப்பிக்காத 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தொழில் வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி […]

Continue reading …

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

Comments Off on வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் உள்பட ஒரு சில திருத்தங்கள் செய்ய சமீபத்தில் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி உள்பட திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் […]

Continue reading …

மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

Comments Off on மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

அரசு டாக்டர்கள் சங்கம் வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது 304ஏ என்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் உடனடியாக சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர். […]

Continue reading …

பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

Comments Off on பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

இன்று மரணமடைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை செய்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ராஜீவ்காந்தி […]

Continue reading …

வந்தே பாரத்தின் டிக்கெட்டின் விலை இவ்வளவா?

Comments Off on வந்தே பாரத்தின் டிக்கெட்டின் விலை இவ்வளவா?

சென்னையிலிருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலின் பயண கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிக அதி விரைவு ரயில் வந்தே பாரத் ரயில்கள் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் 5வது சேவை சென்னை டூ பெங்களூரு டூ மைசூரு வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது. ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது. அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு […]

Continue reading …

சென்னையிலிருந்து தாமதமாக கிளம்பும் விமானங்கள்!

Comments Off on சென்னையிலிருந்து தாமதமாக கிளம்பும் விமானங்கள்!

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக விமான ஊழியர்கள் வேலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக […]

Continue reading …

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

Comments Off on இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!
இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை அரசு முறை நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். நாளை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. நாளை திண்டுக்கலில் காந்தி கிராமத்திலுள்ள காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாணவர்களுக்கு பட்டமளிக்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். […]

Continue reading …