Home » Archives by category » சென்னை (Page 30)

சென்னையிலிருந்து தாமதமாக கிளம்பும் விமானங்கள்!

Comments Off on சென்னையிலிருந்து தாமதமாக கிளம்பும் விமானங்கள்!

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக விமான ஊழியர்கள் வேலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக […]

Continue reading …

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

Comments Off on இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!
இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை அரசு முறை நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். நாளை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. நாளை திண்டுக்கலில் காந்தி கிராமத்திலுள்ள காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாணவர்களுக்கு பட்டமளிக்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். […]

Continue reading …

சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு?

Comments Off on சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு?

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளிவந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இச்சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னையிலுள்ள 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் […]

Continue reading …

நீதிமன்றத்தில் ஆன்லைன் குறித்து புதிய மனு!

Comments Off on நீதிமன்றத்தில் ஆன்லைன் குறித்து புதிய மனு!
நீதிமன்றத்தில் ஆன்லைன் குறித்து புதிய மனு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில் இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைத்து, அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. தற்போது மும்பையை சேர்ந்த ஆல் இந்தியா கேமிங் பெடரேஷன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய […]

Continue reading …

நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Comments Off on நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. நாளை முதல் தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 11-ம் தேதி அன்று கனமழை எச்சரிக்கை […]

Continue reading …

சினிமா பாணியில் நடந்த காதல் சம்பவம்!

Comments Off on சினிமா பாணியில் நடந்த காதல் சம்பவம்!

சினிமா பாணியில் சென்னையில் ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் கைதாகியுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடுவாஞ்சேரியில் வயர் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். அங்கேயே ரூம் எடுத்து அவர் தங்கியிருந்த நிலையில் அவருடன் கதிர், யுவராஜ் என இரண்டு இளைஞர்களும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவரை அந்த 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை இளைஞரின் […]

Continue reading …

மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது குண்டாஸ்!

Comments Off on மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது குண்டாஸ்!

கல்லூரி மாணவர் சதீஷ் சென்னை பெரம்பூரில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த கல்லூரி மாணவர் சதீஷ் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர […]

Continue reading …

கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

Comments Off on கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

திடீரென தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜம்புலிங்கம் தலைமையில் நடந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். லாரிகளில் தண்ணீர் எடுக்க உரிமை மறுப்பது லாரிகளை காவல்துறையினர் பிடிப்பது போன்றவற்றை கண்டித்து […]

Continue reading …

ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

Comments Off on ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

இன்று சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். இந்நிலையில் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை […]

Continue reading …

மத்திய அரசு திட்டம்!

Comments Off on மத்திய அரசு திட்டம்!

மத்திய அரசு இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூர் வரை இயங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் […]

Continue reading …