Home » Archives by category » சென்னை (Page 35)

ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம்!

Comments Off on ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம்!

அமைச்சர் நாசர் விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப் போவதாக கூறியுள்ளார். “ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும். மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.” இவ்வாறு […]

Continue reading …

பொதுமக்களுக்கு சுதந்திர தினவிழாவுக்கு அனுமதி!

Comments Off on பொதுமக்களுக்கு சுதந்திர தினவிழாவுக்கு அனுமதி!

பொதுமக்களுக்கு இம்மாதம் மெரினாவில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தினவிழாவை பார்வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 75ம் ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டில் அனைவரும் இதைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். வீடுதோறும் […]

Continue reading …

சென்னையில் 2வது விமான நிலையம்!

Comments Off on சென்னையில் 2வது விமான நிலையம்!

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். சென்னை மக்கள் பல ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்தது. இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்தது. இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது […]

Continue reading …

ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

Comments Off on ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் உட்பட 199 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்துள்ளனர். ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள், தலிபான் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி, அதிகாரப்பூர்வமான முன்னாள் ஆப்கானிஸ்தான் குடியரசின் முன்னாள் மூவர்ணக் கொடியின் கீழ் சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலும், உளவுத்துறையின் செயல் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவருமான அகமதுல்லா வாசிக், குழு உறுப்பினர்களில் […]

Continue reading …

அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Comments Off on அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை, ஜூலை 29- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில், சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை, குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து, சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டுக்கு 2ஆயிரம் சிம்கார்டு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டுக்கு 2ஆயிரம் சிம்கார்டு!

செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காக 2 ஆயிரம் சிம்கார்டுகள் 5ஜி இன்டர்நெட் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இப்போட்டிக்காக 5ஜி இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக 2000 சிம்கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 300 செஸ் […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டுக்கு நடிகர்கள் அழைப்பு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டுக்கு நடிகர்கள் அழைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக காட்சி தருகிறது. செஸ் […]

Continue reading …

திடீரென தீப்பிடித்த கார்!

Comments Off on திடீரென தீப்பிடித்த கார்!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் சென்னையில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரதான போக்குவரத்து சாலையில் போக்குவரத்து நெரிசலில் பயணித்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கார் திடீரென தீப்பற்றியதை கண்ட பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நிமிடங்களில் கார் முன்பக்கம் முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் […]

Continue reading …

4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!

Comments Off on 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!
4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!

ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக […]

Continue reading …