Home » Archives by category » சென்னை (Page 40)

பிரபல கார் தொழிற்சாலை மூடப்படுமா?

Comments Off on பிரபல கார் தொழிற்சாலை மூடப்படுமா?

போர்டு கார் தொழிற்சாலை சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையை வரும் ஜூன் 30ம் தேதியுடன் மூடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போர்டு கார் தொழிற்சாலை நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கார் தொழிற்சாலையின் நிர்வாகம் தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலே அதை மூட முடிவு எடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் புகார் அளித்தன. தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு தொழிலாளர்களுக்கு பெயர் அதிர்ச்சி […]

Continue reading …

சென்னை கமிஷ்னர் கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on சென்னை கமிஷ்னர் கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை!

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்து நடத்துனரை தாக்கியபோது வன்முறையில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்படி வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை கமிஷனர் எச்சரித்துள்ளார். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சென்று வர பேருந்து மற்றும் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். அதில் செல்லும் மாணவர்களுக்குள் “ரூட்டு தல” யார் என்பது குறித்து பிரச்சினை எழுவது மற்றும் பிற கல்லூரி மாணவர்களுடன் எழும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை கண்டித்த நடத்துனரை […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி மணிமண்டபத்தில் ஆய்வு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி மணிமண்டபத்தில் ஆய்வு!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரிடன் கோரிக்கையை ஏற்று, சிவாஜி மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Continue reading …

மக்கள் குறைதீர் முகாம்!

Comments Off on மக்கள் குறைதீர் முகாம்!

மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை நீர் முகாம் சென்னையில் 18வது மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்வது மற்றும் மேலும் மற்ற குறைகளை சொல்வது போன்றவை நடைபெற்றன. இதில் மக்கள் கலந்து கொண்டு பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.

Continue reading …

வரும் 28ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு!

Comments Off on வரும் 28ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு!

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வரும் 28ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ம் தேதி சென்னை வரவிருக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் […]

Continue reading …

முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

Comments Off on முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

சென்னை ஆர்.ஏ. புறம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் மக்களின் 259 கல் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்துவந்த சூழலில் இன்று காலை கண்ணையன் (வயது 60) என்ற முதியவர் வீடுகள் இடிப்பதை கண்டித்து ‘இந்த ஜனங்களை காப்பாத்துங்க’ என்று முழங்கிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.   இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று சட்டச்சபையில் அதற்காக நன்றி தெரிவித்து அவர் பேசும் போது சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை வீணாக்காமல் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * அரசுப்பள்ளி […]

Continue reading …

புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள்!

Comments Off on புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள்!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புறநகர் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை புறநகர் ரயிலில் தற்போது சாதாரண பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே உடன் கூட்டுச்சேர்ந்து முயற்சிகள் நடைபெறும் என்றும் பிடிஆர் […]

Continue reading …

கூடுதல் மெட்ரோ ரயில் தடம் : அமைச்சர் தகவல்

Comments Off on கூடுதல் மெட்ரோ ரயில் தடம் : அமைச்சர் தகவல்

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.   சென்னை மாநகரில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் […]

Continue reading …

கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

Comments Off on கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 50க்கும் குறைவான இருந்து வந்த நிலையில் இன்று சற்றே அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,54,217 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,172 56 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் […]

Continue reading …