
அம்மா உணவகத்தின் மூலம் சென்னையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் ஆரம்பிக்க உள்ளது. அன்று முதல் இவ்வகுப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே அட்மிஷனுக்கு தேவையான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு […]
Continue reading …
“விக்ரம்” திரைப்படம் இன்று வெளியாகி நான்கு காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட உள்ளது. இத்திரைப்படம் வெற்றி என்பது உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், “உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமல் சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயண்ட் […]
Continue reading …
அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, திமுகவின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு […]
Continue reading …
சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவில், மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, தக்காராக எல்.ஆதிமூலம் அவர்கள் உள்ளார். கோவிலின் துணை ஆணையராகவும், செயல் அலுவலராகவும் முல்லை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கோவிலில் பொறுப்பேற்ற நாள் முதல், கோவில் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. முக்கிய இலாகாவை வைத்திருக்கும் தமிழக அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு நெருக்கமானவராக கருதப்படும் முல்லை, சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாக, அவரின் கீழ் பணியாற்றிய பலர் […]
Continue reading …
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து ரஜினிகாந்தை சற்றுமுன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாக உள்ளது. நாசர், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விவாதிப்பதாக கூறப்படுகிறது.
Continue reading …
அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவி உள்ளது. சூப்பர் ஸ்டாரை தினமும் பலரும் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுபற்றி அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது, “அஜித் மற்றும் -ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகவல் பொய்யானது. இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது” என்று தெரிவித்தார்.
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து பேசப்படலாம் என்றும் பேசப்படுகிறது. நீட் தேர்வு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
Continue reading …
தமிழ்நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை திட்டங்களை ஏற்க முடியாது என்று கூறி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் […]
Continue reading …
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஏராளமான மலர்கள், மலர்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மலர்க் கண்காட்சி நாளை முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 […]
Continue reading …
டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். குல்பி, பானிப்பூரி விற்பவர்கள் மற்றும் இன்னபிற வேலையில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவரும் தங்களது பேர் மற்ற விவரங்களை காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Continue reading …