Home » Archives by category » சென்னை (Page 42)

முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

Comments Off on முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Continue reading …

ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

Comments Off on ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

தீ விபத்து ஏற்பட்ட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் தீப்பிடித்த நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்த 128 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து மீட்டனர். இதுகுறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. […]

Continue reading …

ஐஐடியில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா!

Comments Off on ஐஐடியில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா!
ஐஐடியில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா!

சென்னை ஐஐடியில் இன்று ஒரே நாளில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Continue reading …

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது புகார்

Comments Off on ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது புகார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இளையராஜாவின் ஜாதி குறித்த சர்ச்சைக்கிடமான பேச்சால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவை கடுமையான விமர்சனம் செய்தார். அதாவது, “தபேலா எடுத்தவனெல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது, பணமும் புகழும் வந்துவிட்டால் உயர்ந்த ஜாதி ஆகிவிட முடியாது” என்றும் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவை ஜாதி வன்மத்துடன் இளங்கோவன் பேசி உள்ளதாகவும் இரு பிரிவினரிடையே மோதலை […]

Continue reading …

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து!

Comments Off on ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்த்தில் அங்கிருப்பவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் வெளியேற இயலாத சூழல் ஏற்பட்டிருந்தது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Continue reading …

கருணாநிதிக்கு கவிதை எழுதிய வைரமுத்து!

Comments Off on கருணாநிதிக்கு கவிதை எழுதிய வைரமுத்து!

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.   இதனால் தமிழக முதமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில் தமிழ்நாட்டு அரசியல் நெடுங்கணக்கில் முன்னெப்போதுமில்லாத முதல் நிகழ்வு முதலமைச்சராகத் தலையெடுத்த தனயன் முதலமைச்சராகிய தந்தைக்குச் சிலையெடுப்பது எட்டிய தரவுகள் வரை இந்தியாவிலும் இதுவே முதல் என்று தோன்றுகிறது முன்னவர் பின்னவர் இருவரையும் […]

Continue reading …

அயோத்தியா மண்டப விவகாரத்தில் முக்கிய உத்தரவு!

Comments Off on அயோத்தியா மண்டப விவகாரத்தில் முக்கிய உத்தரவு!

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அயோத்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்த அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை நாளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வழங்கி விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. […]

Continue reading …

ஜிஎஸ்டி ஆணையரகம் இசைஞானிக்கு நோட்டீஸ்!

Comments Off on ஜிஎஸ்டி ஆணையரகம் இசைஞானிக்கு நோட்டீஸ்!

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்காருடன் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இளையராஜா ஒப்பிட்டு எழுதியது அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. வரிபாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையகரம் இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோட்டீஸ் அவருக்கு மார்ச் 21ம் தேதி புலனாய்வுத்துறையில் இருந்து அனுப்பட்டுள்ளது. அதே காரணங்களைக் குறிப்பிட்டு, மார்ச் 28ம்தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்த்துறை தலைமை இயக்குனர் […]

Continue reading …

தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை!

Comments Off on தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை!

பாஜக தலைவர் அண்ணாமலை “உதயநிதியின் கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்” என கூறியுள்ளார். நேற்று சட்டமன்றத்தில் உதயநிதி எம்எல்ஏ, “என்னுடைய காரை தவறாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் அந்த காரை கமலாலயம் பக்கம் செல்ல விட்டுவிட வேண்டாம்” என்று கூறினார். அவரது இந்த காமெடியான பேச்சு சட்டமன்றத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, […]

Continue reading …

போஸ்டர் ஒட்டினால் அபராதம்!

Comments Off on போஸ்டர் ஒட்டினால் அபராதம்!

சென்னை மாநகராட்சி தெருக்களின் பொதுப்பலகைகளில் போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கை செய்துள்ளது.   இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல் சாலை, மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கல் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளது.

Continue reading …