Home » Archives by category » சென்னை (Page 48)

காந்தி ஜெயந்தி : குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து!

Comments Off on காந்தி ஜெயந்தி : குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘தேசத்தந்தை – மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் – அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது  மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது.  சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் மற்றும் எல்க்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் மற்றும் எல்க்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னை வந்த இரு ஆண் பயணிகளிடம் இருந்து, 1.38 கிலோ தங்கம், மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த, இரு ஆண் பயணிகளை, சுங்கத்துறையினர் இடைமறித்து, அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது 24 தங்கத்துண்டுகள் லேப்டாப் சார்ஜரில், கருப்பு டேப் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த தங்கத் துண்டுகளின் எடை 1.38 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.58.04 இலட்சம். இவை தவிர மேலும் 15 ஐ-போன்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தி வந்த இருவரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Continue reading …

தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு!

Comments Off on தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் கோட்டம்  பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உட்பட்ட  பகுதிகளில்  இன்று (26.09.2021) நடைப்பெற்று வரும் மாபெரும் மூன்றாவது தடுப்பூசி  முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை அகற்றும்  பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலம்படுத்தும் பணியினை  பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையானது 24.57 லட்சம் ஆகும்.  […]

Continue reading …

சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு […]

Continue reading …

ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

Comments Off on ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

ஆவினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல -ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை ! தாய்ப்பாலுக்கு நிகரான பால் என தமிழக அரசால் விளம்பரப்படுத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தில் மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுமார் 10,295 பால் மாதிரிகளில் 51% பால் மாதிரிகள் அரை மணி நேரத்தில் கெட்டு விடக் கூடியதாக தரம் குறைந்து இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள தணிக்கைத்துறை […]

Continue reading …

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

Comments Off on இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் […]

Continue reading …

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு

Comments Off on 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு

சென்னை, செப் 23: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நேற்று நடந்த இந்த விழாவில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்: திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. புதிய […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல் !

Comments Off on சென்னை விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல் !

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்த போது, அவரது உடலில் தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை […]

Continue reading …

கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

Comments Off on கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு. மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர […]

Continue reading …