புது டெல்லி, மே 29 பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோள்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது. இந்த சேவையைப் பெறும் சிலர், ஏற்கனவே உடல்நல பாதிப்புகளுடன் இருப்பதும், இது கோவிட்-19 தொற்று சமயத்தில் அவர்கள் சந்திக்கும் அபாயத்தை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்புடன் பயணம் செய்த சிலர், ரயில் பயணத்தின் போது […]
Continue reading …சென்னை, மே 29 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் ஊரடங்கிலிருந்து வெளிவருவதற்கு உலகின் பல நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. ஊரடங்கால் உருக்குலைந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்தை சீரமைப்பது தான் உலக நாடுகளின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனாவை விட மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் […]
Continue reading …மீண்டும் தப்பியோடிய கொரோனா நோயாளி – சென்னையில் பரபரப்பு! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் சென்னை கொரோனா தொற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 63 வயது […]
Continue reading …சென்னை, மே 27 இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் 26.5.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மக்களுக்கும், […]
Continue reading …தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் மக்கள் பகல்வேளைகளில் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வியர்வையால் குளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்ன, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று […]
Continue reading …சென்னை, மே 24 திருக்குரான் வழங்கப்பட்ட மாதத்தின் நிறைவாக இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ […]
Continue reading …சென்னை, மே 24 தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிந்து வந்த நான்கு இணை ஆணையர்கள் நேற்று 23/ 5 /2020vஅதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றம் உத்தரவால் அறநிலையத்துறையில் பெரும் சலசலப்பை உருவாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக கடந்த 6 வருடங்களாக கோலோச்சிக் கொண்டு வானளாவிய அதிகாரத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்த நடராஜனை அதிரடியாக சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதைப்போல சென்னை, […]
Continue reading …சென்னை, மே 21 தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ((FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சின்னத் திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள், சுற்றுச்சுவர் […]
Continue reading …சென்னை,மே 18 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணமாக ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒன் லிட்டர் கொள்ளவு கொண்ட பாக்கேட் ஆயில் வழங்கிட ஏதுவாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8,51,85,000/ தொழிலாளர் ஆணையர் பெயரில் அரசாணை எண்.82 நாள்.03.04.2020 மூலம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கிட்டதட்ட […]
Continue reading …சென்னை,மே 18 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் […]
Continue reading …