சென்னை, மே 13 டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதி மீறல்களுக்கும் எல்லா விதமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை. கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு […]
Continue reading …சென்னை, மே 12 மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் /பூசாரிகளுக்கும், ஒருகால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் ஊதியமின்றி […]
Continue reading …சென்னை,மே 12 கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி […]
Continue reading …சென்னை,மே 11 தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 538, செங்கல்பட்டில் 90, திருவள்ளூரில் 97, அரியலூரில் 33 என சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது. பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது வரை 2,54,899 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது […]
Continue reading …சென்னை,மே 11 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (11.5.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடமாடும் […]
Continue reading …கோவை, மே 11வே மாரீஸ்வரன் கோவை கல்வி நிறுவனங்கள் கட்டணம் கட்ட சொல்லி நிர்பந்தம், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி. ஆர். நடராஜன் எம். பி. கோரிக்கை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்டச் சொல்லி நிர்ப்பந்திப்பதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. உடனடியாக கோவை […]
Continue reading …சென்னை,மே 11 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி. ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (10-05-2020) அவரது இல்லத்தில் வழங்கினார்.
Continue reading …சென்னை,மே 9 தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2.5.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் […]
Continue reading …புது டெல்லி,மே 09 மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், தெலுங்கானாவின் சுகாதார அமைச்சர் எடிலா ராஜேந்திரன் மற்றும் கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் ஆகியோருடனான உயர்நிலைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் முன்னிலையிலான இக்கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கோவிட்-19 மேலாண்மைக்கான நிலைமைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஆயத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து […]
Continue reading …சென்னை,மே 8 நாடு முழுவதும் மின்பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் ‘மின்சார திருத்தச் சட்டம் -2020’ க்கான வரைவை சட்டமாக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில், இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களின் கருத்துக்கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. மேலும் இச்சட்டத்திருத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் […]
Continue reading …