Home » Archives by category » சென்னை (Page 8)

துரை தயாநிதி உடல் நலக்குறைவு வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று அனுமதி.

Comments Off on துரை தயாநிதி உடல் நலக்குறைவு வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று அனுமதி.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Continue reading …

வானிலை மையம் எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “13.03.2024 முதல் 19.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது வருகிற 17-ம் தேதி வரை அதிக வெப்பநிலை […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

மார்ச் 18ம் தேதி வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு […]

Continue reading …

தமிழ்நாடு புதிய தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம்.

Comments Off on தமிழ்நாடு புதிய தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம்.

தமிழ்நாடு புதிய தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம். தமிழக தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த பழனிகுமார் ஓய்வு பெற்றார். இதனையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த ஜோதிநிர்மலாசாமி தமிழ்நாடு மாநில புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Continue reading …

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று  வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது.

Comments Off on மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று  வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று  வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இன்று நேர்காணல் நடத்துகிறது வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் நடத்துகிறார். தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பும் குறித்தும் முதல்வர் கேட்டறிவார்

Continue reading …

*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.*

Comments Off on *தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.*

*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.* *கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்* *நடிகர் அஜித் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.* *நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இன்று நலமுடன் வீடு திரும்பினார் அஜித்.* *அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் மேலாளர் சுரேஷந்திரா அறிவிப்பு.*

Continue reading …

திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

Comments Off on திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். திடீரென அவர் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், “ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற […]

Continue reading …

திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

Comments Off on திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது. மதிமுகவுக்கு  ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக வழங்க இருப்பதாக தகவல். இன்று நடந்த நிர்வாக குழு அவசர கூட்டத்தில் திமுகவிடம் 1+1 இடங்களை கேட்டு பெறுவது என மதிமுக தீர்மானம். அந்த வகையில் திருச்சியில் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. திமுக ஒதுக்கும் தொகுதியில் பம்பரம் அல்லது தனி சின்னத்தில் போட்டி […]

Continue reading …

ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; 

Comments Off on ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; 

காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதாக கூறி ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; காலை நேரத்தில் 6.15 க்கு வர வேண்டிய மின்சார ரயில் 7.15 க்கு தாமதமாக வந்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பயணிகள் வேதனை. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மறியல்.

Continue reading …

சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதுல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் 11-ம் வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளது. சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வீட்டுக்கு […]

Continue reading …