Home » Archives by category » தமிழகம் (Page 166)

அண்ணாமலை தகுதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

Comments Off on அண்ணாமலை தகுதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
அண்ணாமலை தகுதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பேட்டியில், “உலகம் முழுவதும் உள்ளள 10 கோடிக்கும் மேலுள்ள நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்கள். உலகம் முழுவதும் போற்றக்கூடிய தலைவர். எல்லா சாலைகளும் போயஸ் கார்டன் நோக்கி என்ற வகையில், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை முன்னாள் பிரதமர்கள், இந்நாள் பிரதமர்கள், பாஜக தலைவர்கள் […]

Continue reading …

இந்தித் திணிப்பு சுற்றறிக்கைக்கு அமைச்சர் உதயநிதி கண்டிப்பு

Comments Off on இந்தித் திணிப்பு சுற்றறிக்கைக்கு அமைச்சர் உதயநிதி கண்டிப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும், இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும், இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும் & என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உதட்டளவில் தமிழ், தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று […]

Continue reading …

அண்ணாமலைக்கு புகழாரம் சூட்டிய நடிகை குஷ்பு

Comments Off on அண்ணாமலைக்கு புகழாரம் சூட்டிய நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிங்கம் என்றும், அவர் உண்மையைத்தான் பேசுவார் என்றும் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில், “தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது, ஊழல்வாதி என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டனுக்கு மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர் வரிசையாக காத்திருந்தனர். கடந்த 2014ம் […]

Continue reading …

பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் உறுதி!

Comments Off on பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் உறுதி!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழகத்தில் பைட் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என உறுதிப்பட கூறியுள்ளார். பைக் டாக்ஸிகள் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களினால் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் தங்கள் சொந்த இரு சக்கர வாகனங்களையும் தனியார் நிறுவனத்துடன் இணைத்து பைக் டாக்ஸியாக இயக்கி வருகின்றனர். ஆட்டோ மற்றும் டாக்ஸிகளின் கட்டணத்தை விட பைக் டாக்ஸி கட்டணம் குறைவு என்பதால் பலர் பைக் டாக்ஸிகளை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் […]

Continue reading …

காதலால் மனமுடைந்த கல்லூரி தற்கொலை

Comments Off on காதலால் மனமுடைந்த கல்லூரி தற்கொலை

கல்லூரி மாணவி காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் கொல்லம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபியின் மகள் ஆர்த்தி (19 வயது) சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ2ம் ஆண்டு படித்து வந்தார். மாதவரம் பகுதியை அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (24) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் […]

Continue reading …

மைத்ரேயன் இணைப்பு குறித்து அண்ணாமலை!

Comments Off on மைத்ரேயன் இணைப்பு குறித்து அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதையடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை, “பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் […]

Continue reading …

மேகதாது அணை குறித்து முதலமைச்சர் பேச்சு

Comments Off on மேகதாது அணை குறித்து முதலமைச்சர் பேச்சு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தர மாட்டோம்” என்று கூறியுள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]

Continue reading …

ஆவின் நிறுவன விவகாரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி!

Comments Off on ஆவின் நிறுவன விவகாரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு. பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை […]

Continue reading …

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

Comments Off on வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டண உயர்வ- குறித்து அறிவித்த நிலையில், தற்போது வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எந்த விதமான மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிக குறைந்த அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது. மற்ற மாநிலங்களில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் […]

Continue reading …

டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம்

Comments Off on டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம்

டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டமும் தெரிவித்தனர். ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் அக்கடையில் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.265க்கு ரசீது கொடுத்துள்ளார். மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாட்ஸ் ஆப் மூலம் […]

Continue reading …