Home » Archives by category » தமிழகம் (Page 195)

பாஜகவினர்களுக்கு ஜேபி நட்டா கண்டிப்பு!

Comments Off on பாஜகவினர்களுக்கு ஜேபி நட்டா கண்டிப்பு!

பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அதிமுக தலைமை குறித்தோ, அதிமுக தொண்டர்கள் குறித்தோ கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த சில நாட்களாக ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறியும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழகம் வந்துவிட்டு அதன் பிறகு டெல்லி திரும்பிய ஜேபி நட்டா தற்போது தமிழக பாஜகவினருக்கு […]

Continue reading …

அரசியல்வாதிகளுக்கு இது தலைக்குனிவு: விஜயகாந்த்!

Comments Off on அரசியல்வாதிகளுக்கு இது தலைக்குனிவு: விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நடந்த +2 பொது தேர்வில் தமிழ் பாடத்தை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தலைகுனிவு என்று தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற +2 தேர்வில் 50 ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதவில்லை. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்து நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் விஜயகாந்த், “தமிழ் தேர்வை ஐம்பதாயிரம் […]

Continue reading …

பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பா?

Comments Off on பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பா?

பள்ளி கல்வித்துறை நேற்று தொடங்கிய +2 பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று அறிவித்திருந்தது. நேற்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. நேற்று +2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து கல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் […]

Continue reading …

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Comments Off on மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரக்கோணத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வயல்வெளியில் பன்றிக்காக மின்வேலியில் சிக்கி வயல்வேலி உரிமையாளர் வரதன் கைது செய்யப்பட்டுள்ளார். அரக்கோணம் அருகே வயல்வெளியை பன்றிகள் நாசம் செய்து வருவதால், அதனிடமிருந்து விவசாய விளைபொருட்களையும், நிலங்களையும் பாதுகாக்கும் நோக்கி, விவசாயிகள் மின்வேலி அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். […]

Continue reading …

தமிழகத்தில் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!

Comments Off on தமிழகத்தில் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக அரசு இந்த காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் மூன்று நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்றபோது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவாதாக அறிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இத்திட்டம் எப்போது அமலுக்கு வருமென்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்கட்சிகளும் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. சமீபத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் […]

Continue reading …

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Comments Off on அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதினர். செமஸ்டர் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு […]

Continue reading …

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் +2 தேர்வு எழுதவில்லையா?

Comments Off on 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் +2 தேர்வு எழுதவில்லையா?

பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் 50,674 மாணவ மாணவிகள் +2 தேர்வு எழுதவில்லை என பள்ளி அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இன்று 2022&-23ம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் […]

Continue reading …

ஆவேசமான டி.ஆர்.பாலு!

Comments Off on ஆவேசமான டி.ஆர்.பாலு!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசிய பிறகு அளித்த பேட்டியில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் […]

Continue reading …

மனைவிக்கு 1000 மடங்கு பவர் இருப்பதாக கூறிய அண்ணாமலை!

Comments Off on மனைவிக்கு 1000 மடங்கு பவர் இருப்பதாக கூறிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை விட 1000 மடங்கு தன் மனைவிக்கு பவர்புல்லாக இருப்பதாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடன் என்னை ஒப்பிடவில்லை. ஜெயலலிதா ஒரு தனித்தன்மை உள்ள தலைவர், அவர் தவறான முடிவு எடுத்தால் கூட அந்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார். ஏனெனில் அவர் தலைவர். அதே போல் தான் நானும் ஒரு முடிவை எடுத்தால் பின்வாங்க மாட்டேன். அதற்காக நான் ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை, ஒவ்வொரு கட்சிக்கும் […]

Continue reading …