லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா சம்பவ இடத்திலேயே பலி.. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சானிதா இவர் திருமணமானவர். இவருட கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் சானியா எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியபோது, சார்ஜரை கையில் பிடித்தவாரே சானியா இறந்து கிடந்துள்ளார்.
Continue reading …கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 12-ம் நாளான இன்று ( திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பட்டு பனகல் வீதி, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி தெரு, கீழவாணி மூல வீதி, தெற்கு வாணி மூல வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரம் ஆகிய பகுதிகளில் […]
Continue reading …ரீமால் புயல் வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்தது. தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு 10.30 முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது என தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 – 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியது. ரீமால் புயலின் […]
Continue reading …கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. கொட்டும் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டத்திற்கு கடந்த 10 நாட்களாக கன மழை மற்றும் அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்ததால் அருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவான நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த […]
Continue reading …தேனியில் வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்து பேர் கைது. இரண்டு பேர் தப்பி ஓட்டம். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு […]
Continue reading …டேங்கர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி, உடல் நசுங்கி ஓட்டுநர் பலி. நத்தம்-மதுரை 4 வழிச்சாலையில் தடுப்புகளின் இடையே உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நேற்று மாலை நடைபெற்று வந்தது. மதுரையைச் சேர்ந்த நிறுவனத்தின் டெம்போ சரக்கு வாகனத்தை, சென்னையில் இருந்து ஒட்டி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியன், தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த டேங்கர் லாரியின் பின்பக்கமாக அதிவேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி […]
Continue reading …*அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்* மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் […]
Continue reading …வைகோவுக்கு அறுவை சிகிச்சை – துரை வைகோ தகவல். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
Continue reading …முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ,குமுளியில் நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
Continue reading …துபாயில் இருந்து இன்று காலை புறப்பட்டு மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம். மதுரையில் இருந்து அந்த விமானத்தில் துபாய் செல்ல இருந்த 168 பயணிகள், மாற்று விமானம் ஏற்பாடு செய்யாததால் ஸ்பைஸ்ஜெட் உழியர்களிடம் வாக்குவாதம்.
Continue reading …