Home » Archives by category » விளையாட்டு (Page 9)

தமிழக அரசின் விருது!

Comments Off on தமிழக அரசின் விருது!

தமிழக அரசு விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில், கடந்த 2018 – 2019 மற்றும் 2019 – 2020ம் ஆண்டுகளுக்காக சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்கள், விளளையாடு ஒருங்கிணைப்பு குழுக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இவ்விருதுகளுக்கான […]

Continue reading …

அமைச்சர் மெய்யநாதன் புதிய தகவல்!

Comments Off on அமைச்சர் மெய்யநாதன் புதிய தகவல்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தற்போது மீண்டும் சர்வதேச போட்டி ஒன்று நடைபெற போவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். முதல்முறையாக சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப் போவதாக இருப்பதாகவும், நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12ம் தேதி சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி துவங்க இருப்பதாகவும் ஒரு வாரம் இப்போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் […]

Continue reading …

பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

Comments Off on பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!
பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

பிசிசிஐ வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் இந்திய வீரர்கள் விளையாட கூடாது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் வாங்கி உள்ளனர். குறிப்பாக ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் […]

Continue reading …

உலக ஜெயிண்ட்ஸ் அணியோடு மோதும் மகாராஜாஸ் அணி

Comments Off on உலக ஜெயிண்ட்ஸ் அணியோடு மோதும் மகாராஜாஸ் அணி

தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான போட்டி நடக்க உள்ளது. இந்திய அணியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் சவுரவ் கங்குலி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியவர். கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது பிசிசிஐ தலைவராக கடந்த 3 ஆண்டுகள் செயல்படுகிறார். இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தலைமையில் இந்திய வீரர்கள் விளையாடும் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் மகாராஜாஸ் […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டில் ரூ.1 கோடி பரிசு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டில் ரூ.1 கோடி பரிசு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கினார். கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8ம் தேதியுடன் போட்டிகள் நிறைவடைந்தது. போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கணிசமான அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக […]

Continue reading …

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்!

Comments Off on வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே அணியில் முன்னாள் வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பதும், அவர் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவம் செய்துள்ளது. […]

Continue reading …

பல்லாங்குழி ஆடிய பூட்டான் வீராங்கனைகள்!

Comments Off on பல்லாங்குழி ஆடிய பூட்டான் வீராங்கனைகள்!

பூட்டான் வீராங்கனைகள் செஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்த இடத்தில் பல்லாங்குழி விளையாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் விளையாட வந்த பூட்டான் நாட்டின் வீராங்கனைகள் ஓய்வு நேரத்தில் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் இனத்தின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டை பூட்டான் […]

Continue reading …

ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

Comments Off on ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் உட்பட 199 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்துள்ளனர். ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள், தலிபான் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி, அதிகாரப்பூர்வமான முன்னாள் ஆப்கானிஸ்தான் குடியரசின் முன்னாள் மூவர்ணக் கொடியின் கீழ் சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலும், உளவுத்துறையின் செயல் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவருமான அகமதுல்லா வாசிக், குழு உறுப்பினர்களில் […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டில் புதிய கட்டுப்பாடுகள்!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டில் புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கு கொள்ளவிருக்கும் வீரர்கள் அனைவருக்கும் குரங்கம்மை சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்பாட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …