கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

Filed under: உலகம் |

சோங்கிங் ஜிபெய் பயாலஜிகல் புரோடக்ட்ஸ் என்கிற நிறுவனம் கண்டு அறிந்த கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க சீனா அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அன்ஹுய் ஜீஃபி லாங்க்காம் பயோஃபார்மா சூட்டிகல் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் நுண்ணுயிரியல் துறையும் இந்த கண்டுபிடிப்பில் ஒன்றிணைத்து செய்யபட்டுள்ளது. தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் கொடுக்கப்பதற்கு கிளினிகல் பரிசோதனைக்கு சீனா தேசிய தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்திடம் சான்றிதழைப் பெற்றுள்ளது.

இதனை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்ப்பதற்கு ஆறு சோதனை காட்சிகளை சோதித்து வருகின்றன. உலகளவில் ஒரு டஜன் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது.