நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டல்.

Filed under: தமிழகம் |

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.