கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டது. இதனை அடுத்து இந்து அமைப்பினரும் மற்றும் பாஜகவும் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் அந்த வீடியோவை நீக்கினாலும், யூடியூப் சேனலை முழுமையாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் நிர்வாகத்துக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளனர்.
Related posts:
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...
இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !
படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !
தமிழ்நாடு புதிய தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம்.