அயோத்தியில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்கவும் மற்றும் சிறப்பான அந்தஸ்தை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ஸ்ரீ பகவானின் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை கட்டுவதற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அயோத்தியில் விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசு செய்தி தொடர்பாளர் கூறியது; அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடித்தவுடன் பக்தர்களின் வருகை மிக பெரும் அளவில் இருக்கும். இதனால் விமான நிலையம் அமைக்கும் வேலைகள் அடுத்த வருடத்திற்குள் முடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்கவும் அதற்குப் பெரும் அந்தஸ்தை வழங்கவும் மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதைப் பற்றிய அறிக்கையை மாநில அரசு விரைவில் விமான போக்குவரத்து அமைச்சகதுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.